Skip to main content

Posts

Showing posts with the label பெ. தூரன்

அடிமனம் | அதீத அகம் | பெ. தூரன்

மனத்திலே நனவிலி மனம் என்ற ஒரு பெரும்பகுதி இருக்கிறதென்று பிராய்டு தமது ஆராய்ச்சியின் மூலம் கூறினாரல்லவா? அதிலே இயல்பூக்கங்களும், நிறை வேறாத இச்சைகளும், அடக்கப்பட்ட உந்தல்களும் அழுந்திக் கிடக்கின்றன. இவையெல்லாம் மறைமுகமாகவாவது வெளியே வந்து திருப்தியடைய முயலும்போதுதான் மனக்கோளாறுகள் ஏற்படுகின்றன என்று பிராய்டு முதலில் விளக்கியபோது பொதுவாக அனைவரும் அவரை ஆமோதித்தார்கள். ஆனால் அவர் அந்த அடிமன உந்தல்களின் அடிப்படையான வேகம் பாலியல்பிலிருந்துதான் தோன்றுகிறது என்று கூறத் தொடங்கியதும் அவருக்கு எதிர்ப்பு உண்டாயிற்று. இந்த இடத்தில் நாம் 'பால்’ என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை மீண்டும் சற்று விரிவாக ஆராய்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பற்றிய ஒரு புதிய விளக்கத்தையும் இங்கு தெரிந்துகொள்ள வேண்டும். ஆண் பெண்ணின் உடல் சம்பந்தமான கலவி வேட்கையைக் காமம் என்ற சொல்லால் குறிப்பிடலாம். அந்தச் சொல்லை வழங்கும்போது அது உடலுறவையே முக்கியமாகக் குறிப்பதாக நாம் இன்று கருதுகிறோம். பிராய்டு கூறுவது இந்தக் காமமாகிய உடலுறவு மட்டுமல்ல. சில சமயங்களிலே பிராய்டு குறிப்பதை ‘அன்பு வாழ்வு' என்ற...

அடிமனம் | ஆழ்ந்த பகுதி | பெ. தூரன்

ம னத்தை மூன்று முக்கியமான பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம் என்று முன்பே கண்டோம். சாதாரணமாகத் தொழிற்படுவது மனத்தின் மேல் பகுதியாக உள்ள நனவு மனம். அதைச் சேர்ந்தாற்போல அதன் அடிப்பாகமாக இருப்பது இடைமனம் அல்லது நனவடி மனம். அதற்கும் கீழே இருப்பது அடிமனம். இதைத்தான் கனவிலி மனம் என்று கூறுகிறோம். இப்பகுதியில் உள்ள அநுபவங்களும் இச்சைகளும் நனவுக்கு எளிதாக வருவதில்லை. இவ்வாறு ஆராய்ச்சிக்காக மூன்று முக்கியப் பகுதிகளாக நாம் பிரித்துக்கொண்டாலும் இத்தகைய பிரிவினை எதுவும் மனத்தில் இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மனத்தை இவ்வாறு பிரித்து ஆராயலாம் என்கிற விஷயம் சிக்மண்ட் பிராய்டின் ஆராய்ச்சிகளின் பயனாகவே தெளிவடைந்தது. அதற்கு முன்பெல்லாம் உளவியலறிஞர்கள் மனத்தை நனவுமனம் என்கிற ஒரே பகுதியாகவே கருதி ஆராய்ந்தார்கள். பிராய்டுக்கும் கனவிலி மனமாகிய அடிமனத்தைப் பற்றிய எண்ணம் நாளடைவில்தான் உறுதியடைந்தது. மனநோயால் துன்புறுகின்றவர்களைத் ‘தடையிலாத் தொடர்முறை’யால் ஆராய்கின்றபோது மறந்துபோன இளமைப் பருவத்து அநுபவங்களும் அதிர்ச்சிகளும் வெளியாயின. குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட சில அநுபவங்கள் கொஞ்சம்கூட நினைவில் இல்...

அடிமனம் | மனவசியம் | பெ. தூரன்

ம னம் என்பது சூட்சுமமானது. அதிலே பல்வேறு நிலைகள் இருக்கின்றன. பல மாடிகள் கொண்ட ஒரு மாளிகையை மனத்திற்கு உபமானமாகக்கூடச் சொல்லலாம். ஏனென்றால் மனத்திலே அத்தனை நிலைகள் உண்டு. ஆனால் மாடி வீட்டைப் போலத் தனித்தனியான பிரிவினை மனத்திலே கிடையாது. மனம் என்பது ஒன்றேதான். அது சாதாரணமாக வெளிப்படையாகத் தொழிற்படும் நிலையை வெளிமனம் அல்லது நனவு மனம் என்றும், அதையொட்டிற் போலவே இருந்து தொழிற்படும் பகுதியை நனவடி மனம் அல்லது இடைமனம் என்றும், மறைந்து நிற்கும் பகுதியை அடிமனம் அல்லது மறைமனம் அல்லது நனவிலி மனம் என்றும் கூறுகிறோம். பொதுவாக மனம் என்று கூறும்போது நனவு மனத்தையே குறிப்பிடுகிறோம். இவற்றைப் பற்றியெல்லாம் ‘மனமெனும் மாயக் குரங்கு’ என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். மனத்தைப் பற்றிய வேறு பல உண்மைகளையும் அதில் விளக்கியிருக்கிறேன். ஆதலால் அவற்றையே இங்கு மீண்டும் எழுத விரும்பவில்லை. ஆனால் மனத்தைப் பற்றி ஓரளவு முதலில் தெரிந்துகொண்டால்தான், அம்மனத்தில் ஏற்படும் சிக்கல்களையும் தாழ்வுக் கோட்டங்களையும் நன்கு அறிந்துகொள்ள முடியும். மனத்தில் நனவிலி மனம் என்னும் ஆழ்ந்த பகுதியொன்று இருப்பதாக நன்கு எடுத்து...

மனமும் அதன் விளக்கமும் | நமக்குப் பெருமை | பெ. தூரன்

அ ண்மையிலே நான் ஒரு திரைப்படக் காட்சியைப் பார்த்தேன். மறைமனத்திலே ஏற்பட்டுள்ள சிக்கலை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் படம் உருவாகியிருக்கிறது. உள்ளத்தைக் கவரும் கதை அது. அதிலே ஓரிடத்திலே ஒன்றுக்குப் பின் ஒன்றாக எத்தனையோ கதவுகள் திறக்கப் படுவது போல ஒரு காட்சியைக் கற்பனை செய்திருக்கிறார்கள். முதலில் ஒரே கதவுதான் முன்னால் தோன்றுகிறது; அது திறக்கவில்லை. உள்ளே மற்றொரு கதவு. அது திறந்ததும் மற்றொரு கதவு. இப்படியே கதவுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன. அவற்றிற்கு முடிவே இல்லை போலக் காண்கிறது. மனத்தின் பல நிலைகளையும், ஆழத்தையும் இவ்வாறு உருவப்படுத்தி அந்தக் காட்சியிலே காட்டியிருக்கிறார்கள். மனம் அத்தனை மாயமானது. அதன் விந்தைச் செயல்களையெல்லாம் பொதுப்படையாக இதுவரை ஆராய்ந்தோம். மனம் என்றால் என்ன என்று திட்டமாக எடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும் அதன் செயல்களை ஒருவாறு தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் முக்கிய பகுதிகளாகிய நனவு மனம், நனவிலி மனம், நனவடி மனம் (வெளி மனம், மறை மனம், இடை மனம்) எவ்வாறு வேலை செய்கின்றன என்றும் பார்த்தோம். பகுதிகள் என்று கூறும்போது உண்மையில் இப்படிப் பகுதிகள் இல்லை என்...

மனமும் அதன் விளக்கமும் | மன நலம் | பெ. தூரன்

உ டலை எவ்வாறு நலமாக வைத்திருக்க வேண்டுமோ அது போலவே மனத்தையும் நலம் குறையாமல் வைத்திருப்பது வாழ்க்கையின் இன்பத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படையாகும். மனத்தின் பல விந்தைகளை இதுவரையில் சுருக்கமாக அறிந்து கொண்டோம். அம்மனத்தை எவ்வாறு நலம் செழித்து ஓங்கச் செய்யலாம் என்பது பற்றியும் ஒரளவு முன்பே கூறப்பட்டுள்ளது. இப்பகுதியிலே மேலும் சில வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம். பல வழிகளிலே மனநலம் பாதிக்கப்படலாம். அவற்றை அறுதியிட்டுக் கூறுவது எளிதல்ல. உடல் நலக்குறைவே மனநலத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கலாம். வீட்டுச் சூழ்நிலை, பள்ளி, கோவில், நீதிமன்றம், தொழில் நிலைமை என்று இப்படி மிகப் பலவற்றை நாம் எடுத்துக் கூறலாம். ஆதலால் மனநலமானது, உடலியல், பொருளியல், சமூகவியல், சமயம், அறவியல் முதலான பல துறைகளோடு நெருங்கிய தொடர்புடையதாகும். மேலும் மனநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கும். ஒரு மனிதனுக்கு ஏற்றது மற்றொரு மனிதனுக்கு ஒத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாகக் கூறினால் ஒவ்வொருவனுக்கும் ஏற்பட்டுள்ள அவனுடைய ஆளுமையின் வளர்ச்சியைப் பொறுத்ததாக...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

மனமும் அதன் விளக்கமும் | மனவசியம் | பெ. தூரன்

ஆ ஸ்திரியா நாட்டின் தலைநகராகிய வியன்னா நகரத்தில் மெஸ்மர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது ஓர் அதிசயம் நடந்தது. அவர் நோயாளியை உறக்கத்தில் ஆழ்ந்து போகும்படி செய்துவிட்டார். இதைவிட அதிசயமென்னவென்றால் அந்த உறக்கநிலையிலேயே நோயாளி தமக்கு மருத்துவர் இட்ட கட்டளைகளையெல்லாம் செய்தார்! உறக்கநிலையிலேயே பேசவும் செய்தார்! டாக்டர் மெஸ்மர் வேறு சில நோயாளிகளையும் இவ்வாறு உறக்கநிலையில் ஆழ்த்த முயன்றார். அவருக்கு வெற்றியே கிடைத்தது. இவ்வாறு உறங்கச் செய்து அந்த உறக்கநிலையிலேயே உடல் நலத்திற்காக நோயாளிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறாரோ அவற்றை விழித்த பிறகும் நோயாளிகள் மிக அக்கறையோடு செய்தார்கள். விழித்து எழுந்த உடனேயே நோயாளிகள் தங்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். டாக்டர் மெஸ்மர் தம் கைவிரல் நுனிகளின் மூலம் ஏதோ ஒருவகையான காந்த திரவம் போன்ற சக்தி செல்லுவதாகவும் அதனாலேயே நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் நம்பினார். இந்த மனவசியமானது மெஸ்மரிசம் என்று அவர் பெயராலேயே வழங்கலாயிற்று. அடுத்...

மனமும் அதன் விளக்கமும் | ஓட்டம் முன்னதா, அச்சம் முன்னதா? | பெ. தூரன்

உ ள்ளக் கிளர்ச்சிகள் எத்தனை என்பது பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னலெல்லாம் பெரிய பெரிய பட்டியல்கள் வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு கிளர்ச்சியின் தன்மையென்ன, அதனோடு தொடர்புள்ள இயல்பூக்கம் என்ன, அது பிறப்பிலிருந்தே உண்டானதா அல்லது சூழ்நிலையால் தோன்றியதா என்று இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் நடைபெறும். நடத்தைக் கொள்கை உளவியலைத் தோற்றுவித்த வாட்ஸன் என்பவர் பச்சைக் குழந்தைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனாக மனிதனுக்கு அச்சம், இனம், அன்பு என்ற மூன்று உள்ளக் கிளர்ச்சிகள்தான் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினார். இவர் கூறியதைப் பொதுவாக எல்லாரும் ஆமோதித்தார்கள். ஆனால் அண்மையிலே சில உளவியலறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக மேலே கூறியவாறு குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் இருக்கின்றனவா என்பதில் ஐயம் தோன்றியிருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகளை உளவியல் அறிஞர்களுக்கு விட்டுவிடலாம். உள்ளக் கிளர்ச்சியைப் பற்றி இன்னும் ஒரு வேடிக்கையான விவாதம் உண்டு. உள்ளக் க...

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

மனமும் அதன் விளக்கமும் | கற்றுக் கொடுத்தது யார்? | பெ. தூரன்

இ ப்பொழுதுதான் பிறந்த கன்றுக்குட்டி மெதுவாக முயன்று எழுந்து நிற்கிறது. தாய்ப் பசுவின் பால் சுரக்கும் மடியருகே சென்று பால் குடிக்கத் தொடங்குகிறது. மடியிலே வாயை வைத்துப் பால் குடிக்க அதற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? வாத்துக் குஞ்சு முட்டையினின்றும் வெளிவருகிறது; தண்ணிரைக் கண்டதும் அதில் உடனே இறங்கி நீந்துகிறது. அதற்கு யார் நீந்தக் கற்றுக் கொடுத்தார்கள்? குளவி ஒன்று பருவம் அடையும்போது கூடு கட்டத் தொடங்குகிறது. அதில் பக்கத்திலே முட்டையிடுகிறது. புழுவொன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கிறது. புழுவைத் தன் கொடுக்கால் கொட்டி அது நினைவற்று ஆனால் உயிரோடு கிடக்கும்படி செய்கிறது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த பிறகு அவற்றிற்கு உணவாகப் பக்கத்திலேயே இப்படிப் புழுவை வைத்துக் கூட்டை மூடிவிட்டு வெளியேபோய் இறந்துவிடுகிறது. அந்தக் குளவிக் குஞ்சுகள் பெரிதாகும்போது அவைகளும் இதே போன்று செய்கின்றன. அவற்றிற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? கற்றுக் கொடுக்கத் தாய்க்குளவிகூட இல்லையே? பிறகு எப்படி அந்தக் குஞ்சுகளும் தாய் செய்ததுபோலவே செயல் புரிகின்றன? இவ்வாறு கற்றுத் தெரிந்துகொள்ளாத செயல்களைச் ச...

மனமும் அதன் விளக்கமும் | கிலி | பெ. தூரன்

ஒ ரு நாள் இரவு எட்டு மணியிருக்கும். புதிதாக வந்த நண்பரொருவரோடு வெளித் திண்ணையிலமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன். சந்தித்துப் பல ஆண்டுகளாகிவிட்டபடியால் அவர் குதுாகலத்தோடு தமது வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் முகத்திலே மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருந்தது. அது கார் காலம். வானத்திற்குப் போர்வையிட்டது போல எங்கும் கருமேகக் கூட்டம். திடீரென்று இடியின் பெருமுழக்கம் கேட்டது. மின்னல் பளிச்சிட்டது. அது வரைக்கும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த நண்பர் இடிக்குரலைக் கேட்டு அலறி நடுங்கலானர். இடியோசை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவர் துள்ளியெழுந்தார். மருண்டு மருண்டு அச்சத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இடியிடிப்பதைக் கண்டு அவர் இப்படி அஞ்சுவானேன்; கார்காலத்திலே இடியும் மின்னலும் இயல்புதானே என்று நான் உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தேன். “வீட்டிற்குள்ளே போய்விடலாமா?” என்று அந்த நண்பர் விரைவாகக் கேட்டுக்கொண்டே எழுந்து நடந்தார். வீட்டிற்குள்ளே சென்று அமர்ந்த பிறகும் அவருடைய பேரச்சம் தணியவில்லை. இடிக்குரல் கேட்கும் போதெல்லாம் அவர் திடுக்கிட்டெழுந்தார். “கா...

மனமும் அதன் விளக்கமும் | பகற் கனவு | பெ. தூரன்

உ றங்கும்போது காண்பது கனவு. விழித்திருக்கின்ற நிலையிலும் கனவு காண்பதுண்டு. அது பகற் கனவு. பகற் கனவு என்றவுடன் பகலிலே உறங்கும் போது காணும் கனவு என்று கருதிவிடக் கூடாது. நன்றாக விழித்திருக்கும்போதே எழுகின்ற மனக் கோட்டைக்குத்தான் அப்பெயர் வழங்குகிறது. காலம் பகலாகவும் இருக்கலாம். இரவாகவும் இருக்கலாம். உறக்கநிலையிலே தோன்றுவது கனவு; விழிப்பு நிலையிலே தோன்றுவது பகற் கனவு. கனவு காணாதவர்களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். பகற் கனவு காணாதவர்களும் வெகு அருமை. மக்கள் கூட்டத்தையே இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். பகற் கனவு காண்பவர் ஒரு பிரிவு, செயலிலே ஈடுபடுகின்றவர் மற்றொரு பிரிவு. ஆனால், பகற் கனவு காண்பவன் செயலிலேயே இறங்கமாட்டான் என்பதில்லை. அதுபோலவே செயல் புரிகின்றவன் பகற் கனவு, காணமாட்டான் என்பதில்லை. பகற் கனவில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் ஒரு பகுதி; செயல் புரிவதில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் மற்றொரு பகுதி. பகற் கனவு வேறு; சிந்தனை வேறு. பகற் கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொள்ளுகிருன். ஆனால் சிந்தனை செய்பவன...