நண்பர்களுக்கு வணக்கம், 2019 விமர்சனக் கட்டுரைப் போட்டிக்கு 18 கட்டுரைகள் வந்தன. மூன்று நடுவர்கள் அவற்றை மதிப்பிட்டனர். மூவரின் மதிப்பீடிலும் எந்த கட்டுரையும் பரிசுக்குரிய தகுதியுடன் இல்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் இருப்பவற்றில் ஒவ்வொரு நடுவரும் மூன்று கட்டுரைகளைத் தேர்வு செய்திருந்தனர். நடுவர்களின் கருத்துப்படி, பின்வருமாறு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. தகுதியான கட்டுரை என ஏதும் இல்லாததால், போட்டி அறிவிப்பில் கூறிய பரிசுகளைப் பெற யாரும் தேர்வாகவில்லை. ஆனால், நடுவர்கள் தேர்வு செய்த கட்டுரைகளுக்காக பாலசுந்தர் (அம்புயாதனத்துக் காளி), கற்பக சுந்தரம் (சிவப்புப் பணம்), பிரபாகரன் சண்முகநாதன் (ஜார் ஒழிக) மற்றும் ஜான் மேரி (திகிரி) ஆகிய நான்கு பேருக்கும் 500 ரூபாய்க்கான புத்தகங்கள் அளிக்கப்படும். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கேற்ற கட்டுரையாளர்களுக்கும் நடுவர்களாக இருந்த எழுத்தாளர்கள் பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் மற்றும் க. மோகனரங்கன் ஆகியோருக்கும் போட்டி அறிவிப்பை தன் தளத்தில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நன்றிகள். அழிசி.