Skip to main content

Posts

Showing posts from April, 2019

To find nirvana | Satish Kumar

One day a disciple, Kishor, offered me a book by Gandhi. I told him I wasn't allowed to read any nonreligious books. Next morning as I walked through the desert to find a place for my toilet, he followed and urged me to read the book. He said, "This book is religious in a deep sense, and therefore it is not wrong to read it." What Gandhi was saying was that religion is not religion if it does not help to solve the problems of this world, here and now. If religion takes a person away from this life and this society, then it is escapism. The search for truth is a continuous daily experience. There is absolute or ultimate truth, and the search for truth never ends. Every person's life is a kind of laboratory, and every person should make experiments with truth. Gandhi's ideas were in contradiction with my guru's teaching that as monks we should keep our backs to society and our faces toward God. According to the guru, people like Gandhi who involved th

ஈப்புலி | ந. பிச்சமூர்த்தி

வீட்டிலே பெரிய தொந்தரவாக இருந்தது. கடவுள் எதற்காக ஈக்களைப் படைத்தார் ? குழம்பிலும் சாதத்திலும் விழுந்து செத்துப்போகவா ? இருக்கமுடியாது. பின் ஏன் ? அவரைத்தான் கேட்க வேண்டும். ஆனால் என் எஜமானி கேட்பது வேறு. வீடு மாற்றுகிறீர்களா அல்லது செத்துப் போகட்டுமா ? இப்பொழுது செத்துப்போகக் கூடாது. ஆறில் சாவு வேண்டாம். நூறிலேயே இருக்கட்டும். ஆக வேண்டிய காரியம் ரொம்ப பாக்கி இருக்கிறது. " உங்கள் ஆசையெல்லாம் சரிதான். ஆனால் ஈக்குழம்பு தின்றால் சாகாமல் இருக்க முடியாதே. '' ஜாகை மாற்றுவதற்கு நான் இருந்த கிராமத்தில் வசதி இல்லை. குருவியானால் கூட்டிலிருக்கலாம். குரங்கானால் மரத்தில் வசிக்கலாம். சாகுருவியானால் கோபுரத்தில் வாழலாம். பாம்பானால் புற்றைத் தேடலாம். நாங்கள் என்ன செய்ய முடியும் ? அங்கே வேறு வீடு கிடைக்காது. கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் மருந்துண்டு என்று கேள்வி. ஈக்கு மருந்துண்டா ? மருந்தில்லை. மாற்றுண்டு என்று ஒரு கிராமத்தான் சொன்னான். மறுநாள் அந்த ஆள் ஒரு செடியை ஒடித்துக்கொண்டு வந்து கொடுத்தான். '' இதென்ன ?'' '' ஈப்புலி. '' ''

பூனாவில் காந்தி | நித்ய சைதன்ய யதி

[இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில் விடுதலை செய்தது.  சிறையிலிருந்து வெளியே வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப் போனார்.  அங்கு அவரை நான் சந்தித்துப் பேசிய அனுபவம் இது.] காலை 4 மணிக்கு மணிபவனத்திற்குப் போனேன்.  காலை பிரார்த்தனைக்கு அவர் 5 மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  வழக்கமான ‘ ஶ்ரீராம் ஜெய்ராம் , ஜெய்ராம் ’ க்குப் பிறகு கீதையின்  இரண்டாவது அத்தியாயத்தின் ஐம்பத்தைந்தாவது செய்யுளிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினார்.  அறுபத்து இரண்டாவது செய்யுளுக்கு வந்தபோது அவருடைய குரலில் ஒரு கனிவு உண்டானது.  அவருடைய பாராயணத்தில் முழுமையான உண்மையுணர்ச்சி ஒலித்தது.  முதன் முறையாக நான் அந்த செய்யுள்களை கேட்டுக்கொண்டிருந்தேன். அவற்றின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை என்றாலும் மகாத்மாவின் வாயிலிருந்து நேரிடையாகக் கேட்டதால் அவற்றைப் பாராயணம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.  இப்படியாகத்தான் அதன்பிறகு என் வாழ்க்கைப் பாத

காந்தீய இலட்சியங்கள் வெறுங் கனவுகள் தாமா? | ராஜம் கிருஷ்ணன்

     பாரத நாடு முழுவதும் காந்தியடிகள் பிறந்த நூறாவது ஆண்டை 1969 ல் கொண்டாடினார்கள் . அதற்கு முந்திய ஆண்டுகளில் நான் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கவில்லை . 1968 ம் ஆண்டின் இறுதியில் நான் சென்னைக்கு வந்தபோது , சுதேசமித்திரன் நாளிதழில் காந்தி நூற்றாண்டை ஒட்டி என்னைச் சில கட்டுரைகள் எழுதச் சொல்லிக் கேட்டார்கள் . காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் , அவருடைய இலட்சியங்களைப் பற்றியும் நான் படித்து இருந்தேனே தவிர , நாட்டு விடுதலைப் போரில் எவ்வகையிலேனும் பங்கு கொண்டோ , அப்படிப் பங்கு கொண்டவர்களோடு தொடர்பு கொண்டோ சிறிதும் அநுபவம் பெற்றிருக்கவில்லை . எனவே தயக்கத்துடன் ஒப்புக் கொண்டு அடிகளின் வாழ்க்கையைப் பற்றியும் சத்தியாக்கிரகத் தத்துவத்தைப் பற்றியும் வெளிவந்திருந்த நூல்கள் அனைத்தையும் படித்துப் பார்ப்பதென்று முனைந்தேன் .      டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை வரலாற்றை எழுது முன் சென்னையில் 1931, 32- ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த அந்நியத் துணி மறுப்பு , மதுக்கடை மறியல் போன்ற போராட்டங்களைப் பற்றிய விவரங்களை