Skip to main content

Posts

Showing posts from September, 2019

க.நா.சு.வின் இலக்கியப் பட்டியல்

உலக இலக்கியச் சிகரங்கள் ( இதை ஒரு முழுமையான பட்டியல் என்று கொள்ளக் கூடாது) நாம் தமிழர்கள் என்பதனால் தமிழில் பல நூல்களையும் இந்தியர்கள் என்பதனால் இந்தியாவின் பல நூல்களையும் , ஆசியாவைச் சேர்ந்தவர்களென்பதினால் ஆசியாவின் நூல்கள் பலவற்றையும் , ஐரோப்பிய அமெரிக்க இலக்கியம் இந்தக் கால கட்டத்தில் முக்கியமென்பதினால் ஐரோப்பிய அமெரிக்க நூல்கள் பலவற்றையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். வேறு விதமாகவும் பட்டியல் போட முடியும் , என்னுடைய பட்டியல்தான் முடிவானது என்பதில்லை! தமிழ் நூல்கள் திருவள்ளுவர் , திருக்குறள் சங்க இலக்கியக் கவிதைகள் , 5000, 6000 வரிகள் மாணிக்கவாசகர் , திருவாசகம் திருமந்திரத்தில் சில பகுதிகள் காரைக்கால் அம்மையார் , அற்புதத் திருவந்தாதி ஆழ்வாராதிகளில் ஒரு தொகுப்பு சைவத் திருமுறைகளில் ஒரு தொகுப்பு ஆண்டாள் பாசுரங்கள் முத்தொள்ளாயிரம் இளங்கோ சிலப்பதிகாரம் கம்ப ராமாயணம் (பகுதி) சித்தர் பாடல்கள்--ஒரு தொகுப்பு தனிப் பாடல்கள்- ஒரு தொகுப்பு தாயுமானவர்--சில பாடல்கள் ஜோதி ராமலிங்கம்-சில பாடல்கள் வேதநாயகம் பிள்ளை -பிரதாப முதலியார் ராஜம் ஐயர்-க

கணக்கும், கண்டிப்பும் | ஜி.டி. பிர்லா

காந்தியடிகள் இருக்குமிடத்தில் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்துக்கொள்ளப்படுகிறது. சிறு பிராயம் முதலே ரூபாயின் கணக்கு ஜாக்கிரதையாக வைத்துக்கொள்வது காந்தியடிகளுடைய பழக்கம். அவருக்கு ஒழுங்கில் மிக்க பற்றுண்டு. ஆகையால் அவருடைய குடில் சுத்தமாக மெழுகிப் பூசி ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. இடுப்பிலுள்ள கச்சமும் கச்சிதமாகத்தான் கட்டப்பட்டிருக்கிறது. காந்தியடிகள் கிழவர்தான். ஆயினும் , அவருடைய சரீரம் பளபளவென்று வாலிபர்களுடையது போல் இருக்கிறதென்று ஒரு ராஜப்பிரதிநிதி கூறினார். அவர் தேக ஆரோக்கியத்தை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்பது உண்மை. ஒவ்வொரு விஷயத்திலும் செட்டு செய்யப்படுகிறது. கடிதங்களில் குண்டூசி குத்தியிருந்தால் அதையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொள்வார். லண்டனுக்குப் போகும்பொழுது கப்பலில் ஒரு வெள்ளைக்காரன் தினந்தோறும் வந்து காந்தியடிகளைத் திட்டிவிட்டுப் போவது வழக்கம். ஒருநாள் அவன் காந்தியடிகளைப் பற்றிச் சில விநோதமான கவிதைகள் எழுதி அவரிடம் எடுத்து வந்தான். அவைகளை அவரிடம் கொடுத்தவுடன் அவர் அவைகளைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிந்துவிட்டார். ஆனால் அவைகளில் குத்தப்பட்டிர

காந்திய நாவல்களில் சிறந்தது - கோவை ஞானி

இன்று நான் குறிப்பிட எடுத்துக் கொண்ட புத்தகம்: R. K. Narayan எழுதிய ‘Waiting for Mahatma’. ஏற்கனவே நீர் படித்த புத்தகம். எனக்கு , இது பற்றி நீர் கூறவில்லை. ஆகவே சிலவற்றை நான் கூற விரும்புகிறேன். காந்தியடிகளைப் பற்றிய படப்பிடிப்புத்தான் இந்நூலில் நான் விரும்பும் முதற்பண்பு. காந்தியாரைப் பற்றி நமது கருத்து எப்படியிருந்த போதிலும் , இதை விடச் சிறந்ததொரு , உண்மையான கவர்ச்சியான படப்பிடிப்பு வேறு , இவ்வளவு சுருங்கிய முறையில் தர முடியாது. பாத்திரங்களில் Sriram, Bharati முதன்மையானவர்கள். பாரதியின் உறுதியான காந்தியப் பற்றுக்கு மேலாக அவரது இனிய கலகலப்பான பண்பு மறக்கமுடியாது. ஸ்ரீராம் , பாரதியைப் பெறுவதற்காக காந்திய நெறியில் புகுகின்றான். சில சமயம் இவன் கேலிக்குரியவனாகவும் , எல்லாச் சமயங்களிலும் பாரதியின் பாதையிலேயே கிடப்பவனாகவும் , காண்பிக்கப்படுகிறான். ஜகதீசன் ஒரு தீவிரவாதி நேதாஜியின் அன்பன். நகராண்மைக் கழகத் தலைவர். சாதியப் பற்று வாணிகப் பற்றாக இருப்பது பற்றிய விளக்கம். காந்தியின் இயக்கம் பற்றி அரசின் கண்காணிப்பு. காந்தியாரின் இயக்கம் பற்றிப் பொது மக்களின் அக்கறையின்மை , அச்சம் ஆ

அமேசானில் செப்டம்பர் மாத சலுகை 2019

குரு பீடம் | ₹73.08 http://bit.ly/Gurupeedam வெந்து தணிந்த காடுகள் | ₹42 http://bit.ly/VendhuThanindhaKaadugal மாமிசப் படைப்பு | ₹73.08 http://bit.ly/MamisapPadaippu இரவு | ₹42 http://bit.ly/Iravu ஏழாம் உலகம் | ₹73.50 http://bit.ly/EzhamUlagam புதிய காலம் | ₹73.50 http://bit.ly/PuthiyaKaalam நீலம் | ₹84 http://bit.ly/NeelamVenmurasu எழுதழல் | ₹126 http://bit.ly/Ezhuthazhal ரோலக்ஸ் வாட்ச் | ₹42 http://bit.ly/RolexWatchSC கொமோரா | ₹105 https://amzn.to/2WDKUCK தென்னாப்பிரிக்காவில் காந்தி | ₹105 http://bit.ly/ThenafricavilGandhi நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி | ₹105 http://bit.ly/NarasimhaRaoVSJR சுட்டாச்சு சுட்டாச்சு | ₹73.50 http://bit.ly/SuttachuSuttachu மாணவர்களுக்கான தமிழ் | ₹63 http://bit.ly/MaanavarTamil

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019

தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பல எழுத்தாளர்கள் தாமே தங்கள் நூல்களை நேரடியாக கிண்டிலில் வெளியிடுகின்றனர். சில எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலானவை கிண்டில் மின்னூல்களாகவும் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வாசகப் பரப்பில் மின்னூல் வாசிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது. அழிசி நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அவற்றை அமேசானில் பதிவேற்றுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல முக்கியமான நூல்கள் மின் புத்தகங்களாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான வாசகர்களால் அவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையை வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் விமர்சனக் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டா