மதார் எழுதிய ' வெயில் பறந்தது ' கவிதைத் தொகுப்பை அழிசி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி இந்நூலின் வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கினார். வாசகர்கள் சார்பில் பி.கு பேசினார். நெல்லையைச் சேர்ந்த மதார் ஈரோட்டில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. * எழுத்தாளர் ஜெயமோகன் உரை கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் உரை பி.கு உரை மதார் ஏற்புரை * வெயில் பறந்தது வாங்க 7019426274 என்ற எண்ணில் WhatApp அல்லது Signal மூலம் தொடர்பு கொண்டும் நூலை வாங்கலாம்.