Skip to main content

Posts

Showing posts from January, 2019

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத...

இலக்கியத்தில் உருவங்கள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கியத்தில் பல பல உருவங்கள் உண்டு. அவை முதல் முதலாகப் பல பல மொழிகளில் தோன்றி இலக்கிய உருவம் பெற்று சிறப்பாகச் சில மொழிகளில் பிரமாதமான இலக்கிய அந்தஸ்து பெற்றவை. இந்த உருவம் இந்த மொழியைச் சேர்ந்தது என்று யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. கிணற்றுத் தவளைகள்தான் இந்த மாதிரிப் பெருமை தேடிக்கொண்டு, தங்கள் தங்கள் மொழியே உலகிலுள்ள எல்லா இலக்கியத்துக்கும் ஆதாரம் என்று கட்சி கட்டிக்கொண்டு பெருமை பாராட்டிக்கொண்டிருக்க முடியும். இன்றைய தமிழ் இலக்கியாசிரியன் உலகிலுள்ள எல்லா மொழி இலக்கியங்களுக்கும் உருவங்களுக்கும் வாரிசு. தெரிந்தோ தெரியாமலோ அவன் தமிழ்ப் பழமைக்கெல்லாம் வாரிசாகிறான். - சிலப்பதிகாரத்தையும், சங்க நூல்களையும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாச கத்தையும் அறிந்தோ அறியாமலோ, அவன் மனம் அந்த மரபிலேதான் சமைகிறது. தமிழனாகப் பிறந்த தோஷத்தினால் அவன் விடுகிற மூச்சே தமிழ் மரபு மூச்சு என்றுதான் சொல்லவேண்டும். இதிலே பிற மொழிகளின் மரபு எங்கே எப்படி வருகிறது என்று கேட்கலாம். சம்ஸ்கிருத முதல் நூலை அறிந்ததாகக் காட்டிக்கொள்கிற கம்பனும், ஐரோப்பிய நாவ...

காந்தி கதையில் பாப்பாங்குளம் | சோ. தருமன்

மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக வானொலி மட்டுமே இருந்த காலம். டி.வி.யெல்லாம் அறிமுகமாகவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து போர்டு ஆபிசில் வானொலியுடன் வெளியே ஸ்பீக்கரும் கட்டப்பட்டிருக்கும். மக்கள் கூட்டங் கூட்டமாய் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்பார்கள். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னால், காந்தி மகான் வரலாற்றை 16 மாதங்கள் அதாவது 1965 நவம்பர் முதல் 1967 பிப்ரவரி முடிய வில்லிசையாகப் பாட வேண்டும். அதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்டு திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து வேந்தருக்குக் கடிதம் வருகிறது. அவருடைய குழுவினரைக் கலந்து வேந்தர் கணக்குப் போட்டு, நிகழ்ச்சிக்கு ரூபாய் 500. 16 பாகங்களுக்கும் சுமார் நான்கு முறையாவது திருச்சி போய் வரவேண்டும். நான்கு தடவை கச்சேரியிலேயே 16 பாகங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆக நான்கு முறை வந்துபோக ரூபாய் 1000. ஒரு முறை பதிவு செய்ய ரூபாய் 500. ஆக நான்கு கச்சேரி ரேட் ரூபாய் 2000. மொத்தம் 3000 ரூபாய் வேண்டும் என்று பதில் அனுப்பினார். 1965இல் இவ்வளவு பெரிய தொகை 'ஏ' கிளாஸ் ஆர்ட்டிஸ்டுக்கே கிடையாது. அதேபோல் காந்தி மகான் கதையை 16 ப...

அண்ணய்யனின் மனத்தத்துவம் | ஏ. கே. ராமானுஜன்

அவனுக்கு ஆச்சரியம். மிகுந்த ஆச்சரியம். இந்த அமெரிக்க மானிட இயல் அறிஞன், இந்த ஃபர்கூசனைப் பாருங்கள். மனு நீதியைப் படித்திருக்கிறான். இவனுக்கு நம்முடைய சூதகங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது, தான் பிராமணன். தனக்கு இதெல்லாம் தெரியவில்லை. அமெரிக்காவுக்கு வர வேண்டும் ஆன்ம ஞானத்துக்கு மகாத்மாக்கள் சிறையில் உட்கார்ந்து கம்பிகளுக்கிடையில் சுயசரிதம் எழுதியதைப் போலே. நேரு இங்கிலாந்துக்குப் போய் சொந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டதைப் போலே. தூரத்திலிருந்தால் பச்சை. நம் உடம்பின் பன்னிரெண்டு திரவங்களிலிருந்து நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. உடம்பின் அழுக்கு, வீரியம், இரத்தம், மூளையின் நிணநீர், சிறுநீர், மலம், கொழுப்பு, காதுக்குறும்பி, கண்ணீர், கண்ணில் பீளை, தோலின் வியர்வை (மனு 5. 135) சிகாகோவிலிருந்தாலும் நினைப்பதெல்லாம் கன்னடத்தில்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பதினொன்று, பதினொன்று. முதல் தடவை எண்ணியபோது பதினொரு மலங்களே கிடைத்தன. திரும்பவும் எண்ணும்போது பன்னிரண்டு, சரியாகப் பன்னிரண்டு. அவனுக்குத் தெரிந்த இந்தப் பன்னிரெண்டில் எச்...

மகாத்மா ஆவதற்கு முன் | தி. சே. சௌ. ராஜன்

“மனித சிருஷ்டியில் உயர்ந்தவரும் ஒப்பற்றவருமான ஒருவரை இன்று சந்தித்தேன்” என்று அளவற்ற மகிழ்ச்சியுடன் படுக்கையில் படுத்த வண்ணமே சொன்னார் காலஞ்சென்ற தேச பத்த சிரோமணி வ. வே. ஸு. ஐயர். லண்டனில் இந்தியர் விடுதியில் (India House) 1908-ஆம் வருஷம் ஒரு நாள் இரவு நாங்கள் இருவரும் பேசும் பொழுது அவர் சொல்லிய சொற்கள் இப்பொழுதுதான் நேரில் என்னுடன் சொல்லுவது போல் இருக்கின்றன. அக்காலத்தில் ஸ்ரீமான் காந்தி தென் ஆப்பிரிக்காவில் ஒரு பாரிஸ்டர். இந்தியர்களின் சகிக்க முடியாத தொல்லைகளைப் பார்லிமென்ட்டு சபையாருக்கு எடுத்துரைப்பதற்காக வந்த தூதர். அன்றைத் தினம் பகலில் அவரைக் காணவேண்டிப் புறப்பட்டுச் சென்ற ஐயர் இரவு தான் வீடு வந்து சேர்ந்தார். “செளந்திரம், அவர் சாமான்ய மனிதர் அன்று. அவருடன் பேசப் பேச என் மனம் அவரிடமே ஈடுபட்டுவிட்டது. என்ன அன்பு, என்ன மரியாதை, என்ன தேசபக்தி, என்ன உண்மை! சொல்லி முடியாது போ” என்றார் ஐயர். “ஸ்ரீமான் காந்தியை எங்கே கண்டீர்கள்?” என்று நான் கேட்டேன். “பல இடங்களில் அவரை விசாரித்துத் தேடினேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தலைவர்கள் இறங்கியிருக்கும் பெரிய ஹோட்டல்களில் எல்லா...