Skip to main content

Posts

Showing posts from March, 2021

என் அத்தை | டி. கே. சி.

  ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் என்றால் சென்னையிலே ஒரு தத்துவம். மேல்நாட்டு இலக்கியமோ , கலையோ , நம்முடைய இலக்கியமோ கலையோ அனுபவிக்கப் பெறவேண்டுமானால் , ஆதரவு பெறவேண்டுமானால் , ‘ லக்ஷ்மி விலாசம்’ தான் இடம். பிரபலமான ஹைக்கோர்ட் வக்கீல்தான். புகழ் படைத்த ஹைகோர்ட் ஜட்ஜ்தான். ஆனால் , அந்த வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பற்றி இப்போது பேச வரவில்லை. மேல் நாட்டுக்கலை விற்பன்னர்களும் , வடமொழிப் புலவர்களும் , தமிழ்மொழிப் புலவர்களும் சதா சுற்றப்பட ஒழுகும் ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பற்றித்தான் பேச்சு. லக்ஷ்மி விலாசத்துத் தோட்டத்துக்குள் போவோமானால் , குண்டஞ்சி வேஷ்டிகளையும் காஷ்மீர் சால்வைகளையும் போர்த்துக்கொண்டு , வீட்டுக்குள் நுழைவோரும் , வராந்தாவில் உலாவுவோரும் , மரத்து நிழலில் நிற்போருமான மனுஷர்களைப் பார்க்கலாம். விசாரித்தால் , அவர்கள் சாஸ்திரிகள் , வித்துவான்கள் , பண்டிதர்கள் என்று தெரியவரும். அவர்களுள் ஒருவர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் என்ற தமிழ்ப் புலவர். பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் தமிழ் இலக்கியங்களை அனுபவித்து அறிந்த புலவர். முக்கியமாக , கம்பராமாயணத்தைக் கவி இதயத்தோடு ஒட்டி வாச...