நண்பர்களுக்கு வணக்கம். இரண்டு செய்திகள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன. அழிசி இதுவரை வெளியிட்ட மின்னூல்கள் எதுவும் இப்போது கிண்டிலில் கிடைக்காது. சில நாட்களுக்கு முன் அமேசானிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அருண் குமார் என்பவர் க. நா. சு. நூல்களின் பதிப்புரிமை தன்னிடம் உள்ளதாகப் புகார் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. புகார் கொடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை அளித்து , பதிப்புரிமை மீறலுக்காக அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அமேசான் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. க. நா. சு. படைப்புகள் 2004 ஆம் ஆண்டிலேயே நாட்டுடைமையானவை என்பதை விளக்கியும் பயனில்லை. புகார் கொடுத்திருந்தவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை. மூன்று நாட்களில் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டு அனைத்து நூல்களும் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனவே 2017 முதல் வெளியிட்ட எல்லா நூல்களும் இப்போது விற்பனையில் இல்லை. இப்போதைக்கு மேற்கொண்டு மின்னூல் வெளியீட்டைத் தொடர இயலாது. - மின்னூல்களாக வெளியிட்டபோது சிறப்பான வரவேற்பைப் பெற்ற புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ நூல் விரைவில் அச்சில் வரவி