Skip to main content

நான்கு நூல்கள் அச்சில்

நண்பர்களுக்கு வணக்கம்.

இரண்டு செய்திகள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.

அழிசி இதுவரை வெளியிட்ட மின்னூல்கள் எதுவும் இப்போது கிண்டிலில் கிடைக்காது. சில நாட்களுக்கு முன் அமேசானிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அருண் குமார் என்பவர் க. நா. சு. நூல்களின் பதிப்புரிமை தன்னிடம் உள்ளதாகப் புகார் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. புகார் கொடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை அளித்து, பதிப்புரிமை மீறலுக்காக அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அமேசான் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. க. நா. சு. படைப்புகள் 2004ஆம் ஆண்டிலேயே நாட்டுடைமையானவை என்பதை விளக்கியும் பயனில்லை. புகார் கொடுத்திருந்தவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டபோதும் பதில் கிடைக்கவில்லை. மூன்று நாட்களில் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டு அனைத்து நூல்களும் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனவே 2017 முதல் வெளியிட்ட எல்லா நூல்களும் இப்போது விற்பனையில் இல்லை. இப்போதைக்கு மேற்கொண்டு மின்னூல் வெளியீட்டைத் தொடர இயலாது.

-

மின்னூல்களாக வெளியிட்டபோது சிறப்பான வரவேற்பைப் பெற்ற புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ நூல் விரைவில் அச்சில் வரவிருக்கிறது. காந்தியைப் பற்றி தி. சு. அவினாசிலிங்கம் அவர்கள் எழுதிய ‘நான் கண்ட மகாத்மா’, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற எல். எஸ். கரையாளரின் சிறையனுபவக் குறிப்புகள் அடங்கிய ‘திருச்சி ஜெயில்’ ஆகியவையும் அச்சில் வரவுள்ளன. இவை மூன்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு காண்பவை. இவற்றுடன் முதல் முறையாக நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் ‘வாசிகள்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

நாரத ராமாயணம் - நெடுங்கதை - புதுமைப்பித்தன் - 72 பக்கம் - ரூ. 60

வாசிகள் - சிறுகதைகள் - நாரணோ ஜெயராமன் - 120 பக்கம் - ரூ. 110

நான் கண்ட மகாத்மா - கட்டுரைகள் - தி. சு. அவினாசிலிங்கம் - 192 பக்கம் - ரூ. 170

திருச்சி ஜெயில் - கட்டுரைகள் - எல். எஸ். கரையாளர் - 192 பக்கம் - ரூ. 170

அக்டோபர் 20 வரை நூல்களை முன்பதிவு செய்யலாம். மாத இறுதிக்குள் பதிவு செய்த நூல்கள் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். தனித்தனி நூல்களாகவும் வாங்கலாம். அஞ்சல் செலவு எங்களுடையது.

நான்கு நூல்களும் சேர்த்து ரூ. 400/-

நாரத ராமாயணம், வாசிகள் இரண்டும் சேர்த்து ரூ. 150/-

நான் கண்ட மகாத்மா, திருச்சி ஜெயில் இரண்டும் சேர்த்து ரூ. 300/-

வாட்ஸப் மூலம் பதிவு செய்ய: 7019426274

சிறப்புச் சலுகையில் நூல்களைப் பெற https://azhisi.stores.instamojo.com/

அழிசி நூல்கள் அனைத்தும் Commonfolks இணையதளத்திலும் கிடைக்கும்.

https://www.commonfolks.in/books/azhisi-pathippagam

Comments

Most Popular

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...