(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.) 1931 ( வயது 62) ஜனவரி 4- ஆம் தேதி இங்கிலாந்தில் முகம்மது அலி காலமானார் . முதலாவது வட்ட மேஜை மகாநாடு ஜனவரி 18- இல் முடிவடைந்தது . அதில் இந்தியா பற்றிய பிரிட்டிஷ் கொள்கையைப் பிரதம மந்திரி எடுத்துரைத்தார் . மன்னர் அனுப்பியிருந்த செய்தியில் , இந்தியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருப்பதாகவும் , காங்கிரஸ்காரர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது . ஜனவரி 21- இல் அலகாபாத் சுயராஜ்ய பவனத்தில் ராஜேந்திரப் பிரசாத் தலைமையில்