Skip to main content

Posts

Showing posts from November, 2019

பூதான உதயம் - 3 | வினோபா பாவே

என் பணி சமமாக்குவதே ஒரு விஷயம் நினைவிலிருக்க வேண்டும். நாம் ஏற்றுள்ள பணி எவரையும் எதிர்ப்பதற்காகவல்ல. ‘ சர்வேஷாம் அபி ரோதேன பிர்ம கர்ம ஸமாரபே ’ ( பிர்ம்மகர்மம் அல்லது கடவுளின் பணி எவரையும் எதிர்த்துத் தோன்றாது). நாம் ஏற்றுள்ளது கடவுள் பணியாகையால் இதில் எவரையும் நாம் எதிர்க்கவில்லை. இதில் அனைவரின் நன்மையும் பொருந்தியிருக்கிறது. இதில் ஒவ்வொருவர் மனத்தையும் மற்றவர் மனங்களுடன் இணைக்கும் முயற்சியுள்ளது. ஆகையால் இதில் எல்லா அரசியல் கட்சியினரும் கலந்துகொள்வார்களென்பது என் நம்பிக்கை. மக்களனைவரின் நன்மைக்காகவே இவ்வேலை நடக்கிறதென்று எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் கம்யூனிஸ்டுகள் பாபா செய்யும் இந்த வேலை பணக்காரர்களின் நன்மைக்காக நடக்கிறதென்று சொன்னார்கள். இது நடந்தது மூன்று வருஷங்களுக்கு முன்பாகும். இப்பொழுதோ கம்யூனிஸ்டுகளின் மனமும் நமக்குச் சாதகமாய் மாறியுள்ளது. நாம் ஏழைகளுக்காக வேலை செய்வதால் அனைவரின் மனமும் நமக்கு அனுகூலமாயிருக்குமென்று நான் முதலிலிருந்தே சொல்லிவந்தவன். ஆனால் பாபா பணக்காரர்களின் ஏஜெண்ட் என்ற இந்தப் புதிய குற்றச்சாட்டு என் காதில் விழவே எனக்குப் பெருமகிழ்ச

பூதான உதயம் - 2 | வினோபா பாவே

சுயநலத்திற்கு உயர்ந்த பயிற்சி ஒரு நண்பர் பாபா அனைவரையும் பரமார்த்திகளாக்க — துறவிகளாக்க விரும்புகிறாரென்று எழுதியிருந்தார். மனிதனிடம் பரமார்த்த உணர்ச்சி குறைவாயும் சுயநல உணர்ச்சி அதிகமாயும் இருக்கிறதென்று சொல்லப்படுவதை நான் ஒப்பவில்லை. மனிதனைப் பற்றிய இந்தக் கருத்தே தவறென்பது என் அபிப்பிராயம். சமூகத்திற்காகத் தனது என்பதனைத்தையும் துறப்பதில்தான் மனிதனுடைய நலம் அமைந்திருக்கிறது. மனிதன் எந்த அளவுக்குப் பிறருக்காகத் துறக்கிறானோ , தியாகம் புரிகிறானோ அதே அளவுக்குப் பயன் பெறுகிறான் தாய்க்குத் தம் வீட்டில் கிட்டும் இன்பம் எந்த சுயநலமி அல்லது உலோபிக்குக் கிட்டும் ? தாய்மாரிடம் , “ நீங்கள் சமையலானதும் சாப்பிட்டுவிட்டுப் பிறகு குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் உணவளித்தாலென்ன ?” என்று கேட்டுப்பாருங்கள். தாய்மார் தம் குழந்தைகளிடம் , “ நீங்கள் அனைவரும் என்னை அண்டி , என்னை நம்பி இருப்பதால் என் உடல் வலுவாயிருக்கவேண்டும். எனவே நான் முதலில் பால் அருந்துகிறேன் , பிறகு நீங்கள் அருந்துங்கள் ” என்று சொல்வார்களானால் , தாய்மார் நவீன பொருளாதார விற்பன்னர்களிடம் சீடர்களாகிய இத்தகைய சுயநலப்பாடம் படித்து அ

பூதான உதயம் - 1 | வினோபா பாவே

ஆந்திராவில் பார்வதி புரத்தில் 8-8-55-ல் பேசியது பூதான யக்ஞத்தைப் பற்றி பாரத மக்களுக்கு உள்ள உற்சாகம் வேறு எதிலும் இல்லையென்று நமக்குத் தெரிந்ததே. லட்சக்கணக்கான , கோடிக்கணக்கான மக்கள் இவ்வியக்கத்தின் முன்னேற்றத்தைக் கவனித்து வருகிறார்கள். செய்தித்தாள்களோ ரயிலோ போகாத நாட்டின் பகுதிகளில் கூட இவ்வியக்கச் செய்தியைக் கேட்பதற்கு மக்களுக்கு மிகுந்த உற்சாகம் இருந்து வருவதை நான் கண்டிருக்கிறேன். கோராபுட்டைச் சேர்ந்த ஒரு கிராமக் கூட்டத்தில் பேசுகையில் நான் ரயில்வே டிக்கெட் ஆபீஸை ஒரு உதாரணமாகச் சொல்லத் தொடங்கியதும் எனக்கு , இவர்கள் ஒருக்கால் டிக்கெட் ஆபீசையோ ரயிலையோ பார்த்தேயிருக்க மாட்டார்களோ என்ற ஐயம் பிறந்தது. பிறகு விசாரித்ததில் ஆயிரம் பேர் இருந்த கூட்டத்தில் 13 பேரே ரயில் பார்த்திருந்தவர்கள் என்று தெரியவந்தது. எனவே மிகவும் பிற்பட்டுள்ள பகுதிகளில் கூட பூமிதானச் செய்தி பரவிவிட்டது. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளார்கள். ஆந்திர நாட்டிலும் உற்சாகத்திற்குக் குறைவில்லை என்பதைக் காண்பீர்கள். நான்காண்டுகளுக்கு முன் தெலுங்கானாவில் இது தொடங்கிய பொழுது எனக்கே ஒரு

பல ரூபங்களில் காந்தி: சிறைப்பறவை | அனு பந்தோபாத்யாயா

காந்திஜி , இந்திய மக்களை ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடும்படி தூண்டினார் ; ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார் ; பல முறை சிறைக்கும் சென்றார். கைது செய்யப்பட்ட போதெல்லாம் நீதிபதியிடம் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்வார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு வழக்கில் அவர் மீதும் அவரது சக ஊழியர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வதற்கு அவரே சாட்சிகளை ஏற்பாடு செய்தார். சிறை வாழ்வின் பயங்கரம் , அவமானம் , அவதிகள் - எல்லாமே கொடுங்குற்றங்களைப் புரிந்தவர்களுக்காக ஏற்பட்டவை. அச்சூழ்நிலைக்குள் செல்ல தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் அஞ்சினர். காந்திஜி அவர்களது அச்சத்தை அகற்றினார். அவர் பதினோரு தடவைகள் சிறை சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் நான்கு நாட்களுக்குள் மூன்று முறை அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை முழுமையாக அனுபவித்திருந்தால் அவர் பதினோரு ஆண்டுகள் மற்றும் பத்தொன்பது நாட்களுக்கு சிறையில் இருந்திருப்பார். பல தடவைகளில் அவரது தண்டனை குறைக்கப்பட்டதால் மொத்தம் ஆறு ஆண்டுகள் மற்றும் பத்து மாத காலத்தை சிறைகளில் கழித்தார். தனது 39 வது வயதில் அ