ஆகாகான் சிறையில் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு வேண்டிய மருந்து , டாக்டர் , வைத்தியர் முதலியோரைச் சந்திக்கவோ சிறையினுள் போய்ப் பார்க்க அனுப்பவோ வேண்டிய பொறுப்பு பர்ணகுடிப் பிரேமலீலா பஹனையும் என்னையும் சேர்ந்திருந்தது. நான் பர்ணகுடியில் அத்தை பிரேமலீலா பஹனுடனேயே தங்கி எல்லா ஏற்பாடுகளுக்கும் உதவி புரிந்துவந்தேன். டாக்டர் ஸுசீலாவும் டாக்டர் கில்டரும் ஆகாகான் சிறையில் கூடவே இருந்துவந்தார்கள். ஸர்க்கார் டாக்டர்களும் இருந்தார்கள். டாக்டர் மருந்துகளால் குணம் காணவில்லை என்றதும் நாட்டு வைத்தியம் பார்க்கத் தீர்மானித்தார்கள். டாக்டர் கில்டருக்கும் ஸுசீலா நய்யாருக்கும் நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கிடையாது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். இதற்குப் பிறகு ஆயுர்வேதத்தில் பிரசித்திபெற்ற சிவசர்மா வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் வந்து கஸ்தூர்பாவைப் பரிசோதித்துப் பார்த்து மருந்து கொ டுக்கத் தொடங்கினார். அவர் பர்ணகுடியில் தங்கிப் புனா நகரத்திலுள்ள வைத்தியர்களிடமிருந்து தினமும் மருந்து , பச்சிலைகள் , மூலிகைகள் வரவழைத்து மருந்து தயார் செய்து கொண்டுவந்து கொடுப்