அ ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும் பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது. வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்...