Skip to main content

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும்  பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது.

வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்கப்பட்டன. விமர்சன நோக்கு என்பதன் பொருள் ஆசிரியரையோ ஆக்கத்தையோ பூரணமாக நிராகரித்து தூற்றுவதும் அல்ல. தேர்ந்த விமர்சன கட்டுரை என்பது ஒரு படைப்பின் தனித்தன்மை என்ன? பேசுபொருள் என்ன? தவறவிட்டவை எவை? தமிழ் இலக்கிய வெளியில் அதன் இடம் என்ன? எந்த ஆக்கங்களுடன் ஒப்பிடத்தக்கது? ஆசிரியரின் முந்தைய ஆக்கங்களுடன் உள்ள தொடர்ச்சி என்ன? என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். புத்தக அறிமுகம் அல்லது வாசிப்பு என்ற நிலையில் கட்டுரைகள் நின்றுவிட்டன. எனினும் அவ்வகையில் சிறந்த வாசிப்புக் கோணங்களை முன்வைத்த கட்டுரைகள் பலவும் வாசிக்கக் கிடைத்தன. பரீசீலனைக்கு உட்பட்ட 20 கட்டுரைகளில் இருந்து பத்து கட்டுரைகளை கொண்ட நீள் பட்டியல் இடப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. வெள்ளையானை - சிவ மணியன்
3. நிழலின் தனிமை- ஜெயன் கோபாலகிருஷ்ணன்
4. கொற்றவை- கமல தேவி
5. மெனிஞ்சியோமா - அழகுநிலா
6. வெள்ளை யானை - ஜினுராஜ்
7. இமைக்கணம்- அகிலன்
8. நிழலின் தனிமை - கமலக்கண்ணன்
9. யாமம் - மகேந்திரன்
10. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

இந்த பத்து கட்டுரைகளும் பதாகை இணைய இதழில் அதன் ஆசிரியர்களின் விருப்பின் பேரில் பிரசுரிக்கப்படும். விவாதத்தின் ஊடாக இதிலிருந்து ஐந்து கட்டுரைகள் கொண்ட குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு
2. நிழலின் தனிமை - ஜெயன் கோபாலகிருஷ்ணன்
3. வெள்ளை யானை - சிவ மணியன்
4. யாமம் - மகேந்திரன்
5. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்

தீவிர பரீசீலனைக்கு பின் ஐந்து நடுவர்களில் நால்வர் ரஞ்சனி பாசு எழுதிய காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்தார்கள். எழுத்தாளர் தூயன் சரளா முருகையன் அவர்களின் ஆப்பிளுக்கு முன் பற்றிய விமர்சன கட்டுரையை தேர்வு செய்தார். பெரும்பான்மையினரின் முடிவையொட்டி, போட்டிக்கு வந்ததிலேயே சிறந்த கட்டுரையாக ரஞ்சனி பாசு அவர்களின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் தேர்வு செய்யப்படுகிறது. விமர்சன நோக்கு குறைவாக வெளிப்பட்டாலும், மதுரையின் வரலாற்றுடன் நாவலை இணை வைத்து வாசிக்கும் செறிவான கட்டுரை.

பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. போட்டியை வழிநடத்தி முடிவு அறிவுப்பு வரை துணை நின்ற சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தூயன், ரியாஸ், மதியழகன் அடங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி. இப்போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி. கிண்டில் பரிசு பெறும் ரஞ்சனி பாசு மற்றும் சிறப்பு பரிசு பெறும் ரமேஷ் கல்யாண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அழிசி

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

யானைக்கோவில் - மயிலை சீனி. வேங்கடசாமி

மாமல்லபுரத்து யானைக் கோயில் பாரத நாட்டுக் கோவில்கள் பாரத நாட்டிலே பழைய காலம் முதல் பலவகையான கோவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கட்டடங்களை நாகரம், திராவிடம், வேசரம் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. நாகர அமைப்புக் கோவில்கள் விந்திய மலைக்கு வடக்கேயும், திராவிட அமைப்புக் கோவில்கள் விந்திய மலைக்குத் தெற்கேயும் அமைக்கப்பட்டன என்று சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. வேசர அமைப்புக் கோவில்கள் பாரத நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டன. வேசர அமைப்புக் கட்டடங்களை ஆதிகாலத்தில் பௌத்த மதத்தார் அதிகமாகக் கட்டினார்கள். வேசரக் கட்டடங்களில் சில உட்பிரிவுகளும் உண்டு. ஆனால், பொதுவாகப் பார்க்கும் போது வேசரக் கட்டடங்கள் தரையமைப்பிலும் கட்ட அமைப்பிலும் விமான (கூரை) அமைப்பிலும் வட்ட வடிவம் அல்லது அரைவட்ட வடிவம் உடையவை என்பது தெரியவரும். இவற்றில் சில முழுவட்டமாகவும் சில அரைவட்ட வடிவமாகவும் சில விமானம் மட்டும் வளைந்த (அரைவட்ட) அமைப்புள்ளனவாகவும் இருக்கின்றன. வேசரக் கோவில் கட்டட அமைப்புகளில் யானைக்கோவில் என்றும் கஜபிருஷ்டம் என்றும் கூறப்படுகிற ஒருவகை...

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்  சங்க காலம் என்று தீர்மானமாகாத ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டுவது போல, மணிக்கொடிக் காலம் என்று சமீப காலத்திய முப்பதுகளில் சில ஆண்டுகளைக் குறிப்பிடுவது பரவலாக வழக்கமாகிவிட்டது. ‘மணிக்கொடி’ என்கிற பத்திரிகையின் பெயர் அது ஏற்படுத்திய பாதிப்பினாலும், சந்தர்ப்ப விசேஷத்தினாலும் ஒரு குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தையாகிவிட்டது. இன்று திரும்பிப் பார்க்கும்போது அதை ஏற்றுக்கொள்வது அப்படியொன்றும் தவறில்லை என்றுதான் சொல்லவேண்டும். முப்பதுகளில் முழுக்க முழுக்கச் சிறுகதைப் பத்திரிகையாகப் பல நல்ல சிறுகதாசிரியர்களின் எழுத்துகளைத் தாங்கி ‘மணிக்கொடி’ என்கிற பத்திரிகை, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் விட்டு விட்டுச் செயல்பட்டது. ஒரு ஐந்தாறு ஆண்டுகள்தான். தமிழ் இலக்கியத்தில் ஒரு புது அலையை உருவாக்க அது போதுமானதாக இருந்தது. குறிப்பிட்ட ஒருசில சிறுகதாசிரியர்கள் அதில் எழுதினார்கள். அந்தக் காலத்தில் சிறுகதைகளையோ, நாவல்களையோ மற்றும் எந்த உரைநடை இலக்கியங்களையுமோ இலக்கியமாகக் கருதுவது பெரும்பாலாக வழக்கத்தில் வரவில்லை. அந்தக் காலத்தில் டாக்டர் பட்டங்களோ சாம்ராட் சக்...