Skip to main content

Posts

Showing posts with the label விமர்சனப் போட்டி

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019 - முடிவு

நண்பர்களுக்கு வணக்கம், 2019 விமர்சனக் கட்டுரைப் போட்டிக்கு 18 கட்டுரைகள் வந்தன. மூன்று நடுவர்கள் அவற்றை மதிப்பிட்டனர். மூவரின் மதிப்பீடிலும் எந்த கட்டுரையும் பரிசுக்குரிய தகுதியுடன் இல்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தனர். ஆயினும் இருப்பவற்றில் ஒவ்வொரு நடுவரும் மூன்று கட்டுரைகளைத் தேர்வு செய்திருந்தனர். நடுவர்களின் கருத்துப்படி, பின்வருமாறு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. தகுதியான கட்டுரை என ஏதும் இல்லாததால், போட்டி அறிவிப்பில் கூறிய பரிசுகளைப் பெற யாரும் தேர்வாகவில்லை. ஆனால், நடுவர்கள் தேர்வு செய்த கட்டுரைகளுக்காக பாலசுந்தர் (அம்புயாதனத்துக் காளி), கற்பக சுந்தரம் (சிவப்புப் பணம்), பிரபாகரன் சண்முகநாதன் (ஜார் ஒழிக) மற்றும் ஜான் மேரி (திகிரி) ஆகிய நான்கு பேருக்கும் 500 ரூபாய்க்கான புத்தகங்கள் அளிக்கப்படும். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கேற்ற கட்டுரையாளர்களுக்கும் நடுவர்களாக இருந்த எழுத்தாளர்கள் பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் மற்றும் க. மோகனரங்கன் ஆகியோருக்கும் போட்டி அறிவிப்பை தன் தளத்தில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் நன்றிகள். அழிசி.

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2019

தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பல எழுத்தாளர்கள் தாமே தங்கள் நூல்களை நேரடியாக கிண்டிலில் வெளியிடுகின்றனர். சில எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலானவை கிண்டில் மின்னூல்களாகவும் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வாசகப் பரப்பில் மின்னூல் வாசிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது. அழிசி நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அவற்றை அமேசானில் பதிவேற்றுகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல முக்கியமான நூல்கள் மின் புத்தகங்களாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கான வாசகர்களால் அவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையை வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்தும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் விமர்சனக் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போட்டியில் இரண்டா...

விமர்சனப் போட்டி - பதாகை கட்டுரைகள் - அக். 2018

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018ல் தேர்வான 5 கட்டுரைகள் செப்டம்பர் மாத பதாகை மின்னிதழில் வெளியாகின. மேலும் 5 கட்டுரைகள் அக்டோபர் மாத இதழில் இடம்பெற்றிருக்கிறது. பதாகை ஆசிரியர் குழுவுக்கு நன்றி. கட்டுரையாளர்களுக்கு வாழ்த்துக்கள். ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன் இமைக்கணம் – டி. கே. அகிலன் வெள்ளையானை – ஜினுராஜ் நிழலின் தனிமை – கமலக்கண்ணன் மெனிஞ்சியோமா- அழகுநிலா முதல் 5 கட்டுரைகள் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

விமர்சனப் போட்டி - பதாகை கட்டுரைகள் - செப். 2018

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018ல் தேர்வான 5 கட்டுரைகள் செப்டம்பர் மாத பதாகை மின்னிதழில் வெளியாகியுள்ளன. பதாகை ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி. கட்டுரையாளர்களுக்கு வாழ்த்துக்கள். அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: காவல் கோட்டம் – ரஞ்சனி பாசு அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: When the River sleeps – ரமேஷ் கல்யாண் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: நிழலின் தனிமை – ஜெயன் கோபாலகிருஷ்ணன் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: கொற்றவை – கமல தேவி அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: யாமம் – மகேந்திரன் அடுத்த 5 கட்டுரைகள் அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

அ ழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும்  பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது. வந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்...

கட்டுரையாளர்களுக்கு நன்றி

விமர்சனங்களை அனுப்பிய கட்டுரையாளர்களுக்கு நன்றி. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் கட்டுரை அனுப்புவதற்கான அவகாசம் முடிந்தது. முடிவு விரைவில் வெளியாகும். அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

அழிசி மின்புத்தக வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  கடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அழிசி அந்த நூல்களை கிண்டிலில் பதிவேற்றியது. ஏராளமான வாசகர்களால் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகைய...