Skip to main content

விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018



அழிசி மின்புத்தக வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

கடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அழிசி அந்த நூல்களை கிண்டிலில் பதிவேற்றியது. ஏராளமான வாசகர்களால் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையினை வாசிப்பினை ஊக்குவிக்கும் வகையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு ஆண்டும் நூல் விமர்சனப் போட்டி ஒன்றினை நடத்தி வெல்லும் வாசகருக்கு ஒரு கிண்டில் டிவைஸ் பரிசாக அளிக்க இருக்கிறோம். 

பரிசு விபரம்: Kindle Paperwhite Starter Pack - கிண்டில், அதற்கான உறை, 2 ஆண்டு காப்பீடு மற்றும் 50% கழிவில் அதிகபட்சம் ₹2000 வரை மின் நூல்களை வாங்கும் வாய்ப்பு. மொத்த மதிப்பு : ₹12000

மேலும் முதல் பத்து இடங்களைப் பெறும் வாசகர்களின் கட்டுரைகள் பதாகை மின்னிதழில் அவர்களின் விருப்பத்தின் பேரில் வெளியிடப்படும்.

போட்டிக்கான நிபந்தனைகள்

1. இரண்டாயிரம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகான வருடங்களில் வெளிவந்த நாவல்கள் (Print book / eBook) எதைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்.

2. குறைந்தபட்சம் 600 வார்த்தைகள் கொண்டதாக கட்டுரை இருக்க வேண்டும். அதிகபட்சம் வரம்பு கிடையாது.

3. ஒரு போட்டியாளர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகாததாகவும் இருக்க வேண்டும்.

4. Unicode எழுத்துருவில் word document ஆக அனுப்பவும். டாக்குமெண்ட்டுக்குள் கட்டுரையாளரின் பெயர் குறிப்பிடப்படக்கூடாது. 

5. கட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி azhisiebooks@gmail.com சப்ஜெக்டில் அழிசி கட்டுரைப் போட்டி என்று குறிப்பிடவும். பெயர் முகவரி அலைபேசி எண் போன்ற விபரங்களை மின்னஞ்சலில் குறிப்பிடவும். அலைபேசி எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். 

6. கட்டுரையாளர் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் கிண்டில் டிவைஸ் இந்திய முகவரிக்கே அனுப்பப்படும் என்பதால் கட்டுரையாளர் தவறாமல் இந்திய முகவரி ஒன்றை குறிப்பிட வேண்டும்.

7. கட்டுரை வந்து சேரவேண்டிய கடைசி நாள் 15.08.18

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்





Comments

Most Popular

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...