Skip to main content

Posts

Showing posts from July, 2022

சுரேஷ் பிரதீப் நூலுக்கு கொடிசியா விருது

கொடிசியா மற்றும் பபாசி இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2022 வரும் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோவை புத்தகத் திருவிழாவையொட்டி வழங்கப்படும் இளம் படைப்பாளர்களுக்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புனைவு நூல் பிரிவில் இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2022ல் அழிசி வெளியிட்ட 'பொன்னுலகம்' சிறுகதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. ஜூலை 22ஆம் தேதி புத்தகத் திருவிழா அரங்கில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும். 'பொன்னுலகம்' மின்னூல் வாங்க Amazon Kindle (10% off) https://cutt.ly/7JUU2f9 Google Play Books (10% off) https://cutt.ly/nJU7Y1Z 'பொன்னுலகம்' அச்சுப் பிரதி வாங்க Azhisi (17% off) https://cutt.ly/TLhtDIC CommonFolks (5% off) https://cutt.ly/ALhtjrA Panuval (5% off) https://cutt.ly/MLhtnzE Be4Books (5% off) https://cutt.ly/GLhtcJC DialForBooks https://cutt.ly/zLhtELM

'திருச்சி ஜெயில்' பற்றி கலாரசிகன்

சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகங்களில் , உங்களை ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டி , பக்கத்துக்குப் பக்கம் குறித்து வைத்து , அதே நினைவில் நெகிழவைத்த புத்தகம் எது என்று யாராவது என்னைக் கேட்டால் , தயக்கமே இல்லாமல் நான் குறிப்பிடும் புத்தகம் எல். எஸ். கரையாளர் எழுதிய ' திருச்சி ஜெயில் ' என்பதாகத்தான் இருக்கும். 1941- இல் நவயுக பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டு , 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது அந்தப் புத்தகம். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளிக்கூட நாள்களில் நிறைய கேள்விப்பட்ட பெயர் எல். சட்டநாத கரையாளர். சட்டம் படித்த அந்த செங்கோட்டைக்காரர் , தனது 27- ஆவது வயதில் கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் , துணைத் தலைவராகவும் இருந்தவர். தனது 58- ஆவது வயதில் காலமான சட்டநாத கரையாளர் , தமிழகத்தில் குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவர். காந்தியடிகள் மீது அவருக்கு இருந்தது மட்டற்ற பக்தி. 1940- ஆம் ஆண்டு சங்கரன்கோவிலில் தனிநபர் சத்தியாகிரகம் செய்து சிறைதண்ட