[ வால்க்ஸ்ரஸ்டு சிறையிலிருந்து மகாத்மா தம் மகன் மணி லாலுக்கு எழுதிய கடிதம் இது. இன்றும் பத்திரப்படுத்தப்பட்டு வருகிறது. சிவப்பு மசிப் பென்சிலில் புல்ஸ்காப் அளவு வெள்ளைக் காகிதத்தில் இரு பக்கமும் கையால் வரைந்த ஆங்கிலக் கடிதமே இது. 25 மார்ச்சு , 1909 எனத் தேதியிட்டது. காந்திஜி சிறைக் கைதியாக இருந்தபோது அவருடைய இலக்கம் 777.] காந்திஜி எழுதிய கடிதமாவது: என் அன்பார்ந்த மகனே , மாதம் ஒரு தடவை கடிதம் எழுதவும் , ஒரு கடிதம் பெறவும் எனக்கு உரிமை உண்டு. இந்தக் கடிதம் நான் யாருக்கு எழுதுவது என்பது பற்றி ஒரு கேள்வி பிறக்கிறது. ஸ்ரீ ரிட்சுக்கா ( ‘ இந்தியன் ஒப்பினியனின் ’ ஆசிரியர்) , ஸ்ரீ போலக்குக்கா , உனக்கா என்று நினைத்து உன்னையே தேர்ந்தேன். ஏனென்றால் , நீயே என் சிந்தனையில் எப்போதும் இருக்கிறாய். என்னைப்பற்றி எதையும் சொல்லிக்கொள்ள நான் அனுமதிக்கப்படவில்லை. நான் நிம்மதியாகத்தான் இருக்கிறேன். என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இப்போது உன் அம்மாவுக்கு உடம்பு பூரண குணமென்று நம்புகிறேன். உன்னிடமிருந்து பல கடிதங்கள் வந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவை என்னிடம் சேர்ப்பிக்கப்பட...