Skip to main content

க.நா.சு.வின் இலக்கியப் பட்டியல்


உலக இலக்கியச் சிகரங்கள்
(இதை ஒரு முழுமையான பட்டியல் என்று கொள்ளக் கூடாது)
நாம் தமிழர்கள் என்பதனால் தமிழில் பல நூல்களையும் இந்தியர்கள் என்பதனால் இந்தியாவின் பல நூல்களையும், ஆசியாவைச் சேர்ந்தவர்களென்பதினால் ஆசியாவின் நூல்கள் பலவற்றையும், ஐரோப்பிய அமெரிக்க இலக்கியம் இந்தக் கால கட்டத்தில் முக்கியமென்பதினால் ஐரோப்பிய அமெரிக்க நூல்கள் பலவற்றையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறேன். வேறு விதமாகவும் பட்டியல் போட முடியும், என்னுடைய பட்டியல்தான் முடிவானது என்பதில்லை!
தமிழ் நூல்கள்
திருவள்ளுவர், திருக்குறள்
சங்க இலக்கியக் கவிதைகள், 5000, 6000 வரிகள்
மாணிக்கவாசகர், திருவாசகம்
திருமந்திரத்தில் சில பகுதிகள்
காரைக்கால் அம்மையார், அற்புதத் திருவந்தாதி
ஆழ்வாராதிகளில் ஒரு தொகுப்பு
சைவத் திருமுறைகளில் ஒரு தொகுப்பு
ஆண்டாள் பாசுரங்கள்
முத்தொள்ளாயிரம்
இளங்கோ சிலப்பதிகாரம்
கம்ப ராமாயணம் (பகுதி)
சித்தர் பாடல்கள்--ஒரு தொகுப்பு
தனிப் பாடல்கள்- ஒரு தொகுப்பு
தாயுமானவர்--சில பாடல்கள்
ஜோதி ராமலிங்கம்-சில பாடல்கள்
வேதநாயகம் பிள்ளை -பிரதாப முதலியார்
ராஜம் ஐயர்-கமலாம்பாள்
சுப்ரமணிய பாரதி வசனமும் கவிதையும் ஒரு தொகுப்பு
புதுமைப்பித்தன்-15 கதைகள்
தமிழ்ச் சிறுகதைகள்- ஒரு தொகுப்பு
ஒரு வசன நூல் திரட்டு
ஆர், ஷண்முக சுந்தரம்-நாகம்மாள்
க. நா. சுப்பிரமணியம் பொய்த்தேவு
தி. ஜானகிராமன் மோக முள்
ந. சிதம்பர சுப்ரமணியன் இதய நாதம்
அசோக மித்திரன் 18வது அட்சக்கோடு
சா. கந்தசாமி அவனானது
நகுலன் நினைவுப்பாதை
புதுக்கவிதை ஒரு தொகுப்பு
நாஞ்சில் நாடன் மிதவை
திறனாய்வுக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு
உ. வே. சுவாமிநாத ஐயர், ஒரு கட்டுரைத் தொகுப்பு
திரு. வி. க.
நாமக்கல் இராமலிங்கர், என்கதை
மரபுக் கவிதைகள் ஒரு தொகுப்பு
இ. எஸ். எஸ். ராஜன், நினைவு அலைகள் 
இந்திய நூல்கள்
உபனிஷத்துக்கள் ஒரு தொகுப்பு
தம்ம பதம், அக்கினிப்பிரசங்கம்
அசுவகோஸர் புத்த சரிதம்
வால்மீகி இராமாயணம்
மகாபாரதம் ஒரு சுருக்கம்
காளிதாசன் சாகுந்தலம்
காளிதாசன் குமார சம்பவம்
சூத்ரக; மிருஸ்சகடிகம்
சம்ஸ்கிருதச் சிறு கவிதைகளில் ஒரு தொகுப்பு
பிராக்ருதக் கவிதைகளில் ஒரு தொகுப்பு
கதாசரித்ர சாதகம்
விக்கிரமாதித்தன் சரித்திரம்
அலங்கார சாஸ்திரம் துவண்யாலோக வக்ரோத்தி
ஒரு தொகுப்பு
பிரேம்சந்த் கோதான்
பிரேம்சந்த் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
அக்கேய; சிறுகதைகள் ஒரு தொகுப்பு
பீந்திரநாதத் தாகூர் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
ரபீந்திரநாதத் நாடகங்கள் ஒரு தொகுப்பு
பங்க்கிம்; கபால குன்டகா
விபூதி பூஷன் பபேர் பாஞ்சாலி
மாணிக் பந்தோப் பார்த்தேயா; பொம்மலாட்டம்
வங்கச் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
S. N. பென் சே; முரடன் பாபு
ஃபசிர்மோகன் ஸேனாபதி: புள்ளி எட்டு
வீரேந்திர குமார் பட்டாச்சாரியா மிருத்தியஞ்ஜெய
பக்ஷிர் மூன்று சிறு நாவல்கள்
காரந்த் மண்மனம்
மாஸ்தி சிறுகதைகள்
பல இந்திய மொழிகளிலிருந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு:
இந்தியப் புதுக் கவிதைகள் ஒரு தொகுப்பு
இந்தியக் கவிதைகள் ஒரு தொகுப்பு
இந்தியக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு 
ஆசிய நூல்கள்
பிர்தவுஸி ஷாநாமா
ஹாபிஸ் சிந்தனைகள்
சாதி குலிஸ்தாஸ்
சூபிக் கதைகள்
அரபிக் கதைகள்
கன்ஃபூஸியஸ்-தொகுப்பு:
லாவ்ஸே-டால்
ஜென் கதைகள்
லேடி முராஸக்கி ஜெஞ்சிக் கதைகள்
நவீன ஜப்பானியர் சிறுகதைகள் ஒரு தொகுப்பு:
சுஸாகோ என்டோ! அதிசய முட்டா
நவீன சீனக் கதைகள்
லீபோ கவிதைகள்
டூபு கவிதைகள்
ஒரு ஜப்பானியக் கவிதைத் தொகுப்பு
ஒரு சீனக் கவிதைத் தொகுப்பு
குரங்கு சீன நாவல்
ஆசியச் சிறுகதைகள் ஒரு தொகுப்பு
ஆசியக் கவிதைகள் ஒரு தொகுப்பு 
ஐரோப்பிய அமெரிக்க நூல்கள்
ஹோமர் இரண்டு காவியங்கள்-இலியாது, ஒடிஸி,
ஏஷ்கிலஸ்-சோக நாடகங்கள்
சோபாகிலிஸ் சோக நாடகங்கள்
யூரிபிடீஸ் நாடகங்கள்
அரிஸ்டபேன்ஸ் நாடகங்கள்
பிளேடோ ஒரு ரிப்பப்லிக் சில தொகுப்புகள்
சாக்ரடீஸ் சில சம்பாஷனைகள்
கிரேக்கக் கவிதைகள் ஒரு தொகுப்பு
புளூடார்க் ஜீவிய சரித்திரங்கள் சில
அரிஸ்டாட்டில் பெயட்டிக்ஸ், ஈதிக்ஸ்
மார்க்கஸ் அரேலியஸ் ஆத்ம சிந்தனை
வர்ஜில் ஏணியர்
லத்தீன் புதுக்கவிதைகள், ஒரு தொகுப்பு
டால்டே தேவ ஜீவனம்
பொக்கேச்ஸியோ டெக்கேமரான்
ஸர்வேன்டீஸ் டான் க்விகோட்டே
ஷேக்ஷ்பியர் நாடகங்கள் (20 வரையில்)
மோலியர் நாடகங்கள் சில
மான்டேன் கட்டுரைகள் சில
டாஸ்டாவ்வஸ்கி கரமஸாக் (சகோதரர்கள்)
டால்ஸ்டாய் அண்ணாக் கரிதினா
பால்ஸாக் தகப்பன் கோரியோ
ஸ்டென் தால் சிவப்பும் கருப்பும்
லேகர் லெவ் கெஸ்டா பெர்லிங்
லேகர் க்விஸ்ட் பாரபாஸ்
நட் ஹேம்ஸன் நிலவளம்
லாரன்ஸ் ஸ்டேர்ன் டிரிஸ்ரம் ஷாண்டி
ஸ்வீபட் கல்லிவர் டிராவெல்ஸ்
ஜேன் ஆஸ்டன் எம்மா
ஜார்ஜ் எலியட் மிடில் மார்ச்
கர்ணல்டி டிக்கன்ஸ் டேவிடு காப்பர் பீல்டு
மார்ஸல் புரூஸ்ட் நினைவுகள்
ஜேம்ஸ் ஜாய்ஸ் யுலீஸியஸ்
காப்கா கதைகள் ஒரு தொகுப்பு
தாமஸ்மன் ஜோசப்பும் அவன் சகோதரர்களும்
ஐரோப்பிய மொழிகளில் ஒரு சிறுகதைத் தொகுப்பு
ஐரோப்பிய மொழிகளில் நவீன கவிதைத் தொகுப்புகள்
வால்ட் விட்மென் புள்ளின் இதழ்கள்
எமர்ஸன் கட்டுரைகள்
மெல்வில் மோபிடிக்
வையில்டர்ஸேண்லான்லீயீஸ்ரே பாளம்
மார்க்குவஸ் ஒரு நூறாண்டுத் தன்மை
போர் ஹஸ் சிறுகதைகள்
மோபாஸான் சிறுகதைகள்
பிளோ பேர் மேடம் பெளரி
செக்கோவ் சிறுகதைகள்
செக்கோவ் நாடகங்கள்
ஹென்றிக் இப்ஸன் சில நாடகங்கள்
ஸ்டிரிண்ட் பேர்க் சில நாடகங்கள்
மேக்ஸிம் கார்க்கி சிறுகதைகள் தொகுப்பு
ரில் கே (கவிதைகள்)
லோர்கா (கவிதைகள்)
எலியட் (கவிதையும் விமர்சனமும்)
டபுள்யூபீ லேட்ஸ் - கவிதைகள்
போல்வெலரி (கவிதைகள்)
ரெனேச்சார் (கவிதைகள்)
ஐரோப்பிய, ஆங்கில, விமர்சனக் கட்டுரைகள் ஒரு தொகுப்பு, கார்ளல் லேம்ப் கட்டுரைகள் ஒரு தொகுப்பு, ஆர்.எஸ்.எஸ் கட்டுரைகள் ஒரு தொகுப்பு.
சிறியதும் பெரியதுமாகச் சுமார் 150 நூல்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன. இதை நூறு என்று குறைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் குறைக்கக் கூடாது. முந்நூறு அளவிற்குப் புதுசு புதுசாகச் சேர்த்துக்கொண்டும் போகலாம். உலகத்தின் புராணக் கதைகள் எல்லாம் தெரிந்திருந்தால் நல்லது. அதே போல மதச்சார்பான பல நூல்கள் உண்டு. 300 புஸ்தகங்கள் வரையில் 60 வயது வரையில் உயிருடனிருந்தால் நிச்சயமாகப் படிக்கலாம். 20 வயது முதல் 60 வயது வரை படிக்கும் நூல்கள் சில நூறு நூல்கள் என்று கொண்டால் ஆண்டில் ஆறு ஏழு நூல்களாவது படிக்க வேண்டும். பல நூல்களை இரண்டாவது முறை படிக்கவும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். படிக்கின்ற நூல்களைப் பல தடவைகள் படிப்பது நல்லது.
  • (புதுவைப் பல்கலைக் கழகம், தமிழியல் துறை 1989ஆம் ஆண்டு வெளியிட்ட க.நா.சு.வின் 'உலக இலக்கியம்' என்ற நூலில் 'உலக இலக்கியச் சிகரங்கள்' என்ற தலைப்புடன் உள்ள பட்டியல்.)

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும