Skip to main content

Posts

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும் , இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும் , மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம். சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள் , மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள் , வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள் , இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள் , ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல் , குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் த...

நான் நாஸ்திகனாக இருந்தேன் | கி.ரா.

(படம்: நவசக்தி ஆண்டுமலர் , டிச. 1944 - ஜன. 1945) நான் சென்னைக்கு வந்ததும் , நான் புகுந்த ஆசிரிய கோஷ்டியினர் சிறந்த லட்சியவாதிகள். டி.எஸ்.சி. , வ.ரா. , சிவராமன். கு. ஸ்ரீனிவாசன் , பி. எஸ் . ராமையா எல்லோரும் பாரதியாரின் சீர்திருத்தக் கனலில் மூழ்கி , அந்த கொள்கைகளின்படியே வாழ்க்கையை வகுத்துக்கொண்டவர்கள். குறிப்பாக வ. ரா. பாரதியாருக்காகவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். ஏனென்றால் , அவர் எங்கு இருந்தாலும் , வீட்டிலும் , கடற்கரையிலும் , காரியாலயத்திலும் , எப்போதும் பாரதியாரைப்பற்றியே பேசுவார். அவருடைய கவிதையின் மேன்மையைப் பற்றியும் , அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சாதாரணமான சம்பவங்களைப் பற்றியும் சலிப்பின்றிப் பேசிக்கொண்டேயிருப்பார். ஆகவே அந்தச் சூழ்நிலையின் வேகத்தினால் தாக்குண்ட நான் பாரதியாரைவிடச் சிறந்த கவி தமிழில் இல்லையென்றே எண்ணியிருந்தேன். அதனால் பாரதியாருக்கு முன் வாழ்ந்த கவிகளைப்பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்ததோடு , அறியவேண்டிய அவசியமே இல்லை என்ற அசட்டையுடன் இருந்தேன். சில சமயங்களில் ஆனந்த விகடனில் பி.ஸ்ரீ. அவர்கள் எழுதிவந்த கம்ப சித்திரத்தைப் படித்துப் பார்த்ததுண்டு. ஆனால் அப்போது எல...

க.நா.சு.வின் நான்கு நூல்கள் முன்பதிவுத் திட்டம்

  க.நா.சு.வின் நான்கு நூல்கள் முன்பதிவுத் திட்டம் எமன் (தொகுக்கப்படாத படைப்புகள்) தொகுப்பாசிரியர்: விக்ரம் விலை ரூ.250 சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் ('எழுத்து' இதழில் வெளியான தொடர்) விலை ரூ.200 புதுமையும் பித்தமும்: ஆளுமை - படைப்பு - விவாதம் விலை ரூ.160 படித்திருக்கிறீர்களா? (முதல் பாகம்) விலை ரூ.170 இந்த நான்கு நூல்களின் மொத்த விலை ரூ.780 . முன்பதிவுத் திட்டத்தில் ரூ.580 மட்டும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். 25% சலுகையுடன் அஞ்சல் செலவும் இலவசம். ஜனவரி 15, 2023 வரை முன்பதிவு செய்யலாம். 2023 ஜனவரி மாத இறுதிக்குள் நூல்கள் அனுப்பிவைக்கப்படும். முன்பதிவுக்கு: A/c Holder: SRINIVASA GOPALAN Bank: HDFC Bank A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 UPI: 7019426274@apl GPay: 70194 26274 WhatsApp: 70194 26274 தொடர்புக்கு: 70194 26274 ( பின்குறிப்பு: க.நா.சு.வின் தொகுக்கப்படாத கட்டுரைகளின் தொகுப்பும், நேர்காணல் தொகுப்பும் திட்டமிட்டதைவிட விரிவாகிவிட்டதால் அவற்றைக் கொண்டுவருவதில் சற்று தாமதம் ஆகிறது. ஓரிரு மாதங்களில் அவையும் வெளியாகும்.)

க.நா.சு.வின் புதிய நூல்கள்

க.நா.சு.வின் தொகுக்கப்படாத, மறுபதிப்பு காணாத படைப்புகள் அழிசி வெளியீடாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ராணிதிலக் தொகுத்த ‘விசிறி’ சிறுகதைத் தொகுப்பும் ‘விமரிசனக்கலை’  கட்டுரைத் தொகுப்பும் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து இன்னும் சில க.நா.சு. நூல்கள் வெளிவருகின்றன. 1. எமன் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் என இதுவரை தொகுக்கப்படாத பல்வகை படைப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறார் 'காவிரி' இதழ் ஆசிரியர் விக்ரம். இந்நூலின் பின்னிணைப்பில் க.நா.சு.வின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 2. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் எழுத்து இதழில் க.நா.சு. எழுதிய தொடர் முதன்முறை நூலாகிறது. நிறைவுபெறாத இத்தொடரில் க.நா.சு. கட்டுரைகளுக்கு அப்போது வெளியான எதிர்வினைகளும் க.நா.சு. தேர்ந்தெடுத்த கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. 3. புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம் புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. எழுதியவற்றின் தொகுப்பு. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு வெளியான நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு. புதிய கட்டுரைகளுடன் பு.பி. - க.நா.சு. இருவரும் பங்குகொண்ட விவாதப் பதிவுகள...

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்