Skip to main content

Posts

என் அத்தை | டி. கே. சி.

  ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் என்றால் சென்னையிலே ஒரு தத்துவம். மேல்நாட்டு இலக்கியமோ , கலையோ , நம்முடைய இலக்கியமோ கலையோ அனுபவிக்கப் பெறவேண்டுமானால் , ஆதரவு பெறவேண்டுமானால் , ‘ லக்ஷ்மி விலாசம்’ தான் இடம். பிரபலமான ஹைக்கோர்ட் வக்கீல்தான். புகழ் படைத்த ஹைகோர்ட் ஜட்ஜ்தான். ஆனால் , அந்த வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பற்றி இப்போது பேச வரவில்லை. மேல் நாட்டுக்கலை விற்பன்னர்களும் , வடமொழிப் புலவர்களும் , தமிழ்மொழிப் புலவர்களும் சதா சுற்றப்பட ஒழுகும் ஸ்ரீனிவாச ஐயங்காரைப் பற்றித்தான் பேச்சு. லக்ஷ்மி விலாசத்துத் தோட்டத்துக்குள் போவோமானால் , குண்டஞ்சி வேஷ்டிகளையும் காஷ்மீர் சால்வைகளையும் போர்த்துக்கொண்டு , வீட்டுக்குள் நுழைவோரும் , வராந்தாவில் உலாவுவோரும் , மரத்து நிழலில் நிற்போருமான மனுஷர்களைப் பார்க்கலாம். விசாரித்தால் , அவர்கள் சாஸ்திரிகள் , வித்துவான்கள் , பண்டிதர்கள் என்று தெரியவரும். அவர்களுள் ஒருவர் பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் என்ற தமிழ்ப் புலவர். பாலசரஸ்வதி கிருஷ்ணமாச்சாரியார் தமிழ் இலக்கியங்களை அனுபவித்து அறிந்த புலவர். முக்கியமாக , கம்பராமாயணத்தைக் கவி இதயத்தோடு ஒட்டி வாச...

மதாரின் 'வெயில் பறந்தது'

மதார் எழுதிய ' வெயில் பறந்தது ' கவிதைத் தொகுப்பை  அழிசி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி இந்நூலின் வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கினார். வாசகர்கள் சார்பில் பி.கு பேசினார். நெல்லையைச் சேர்ந்த மதார் ஈரோட்டில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. * எழுத்தாளர் ஜெயமோகன் உரை கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் உரை பி.கு உரை மதார் ஏற்புரை * வெயில் பறந்தது வாங்க 7019426274 என்ற எண்ணில் WhatApp அல்லது Signal மூலம் தொடர்பு கொண்டும் நூலை வாங்கலாம்.

தாயார் கொடுத்த தனம் | நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

  வெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம்! போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் ?" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே! போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே ? நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் ...

என்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்

பாதித்த என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பற்றி நேற்று சிறிது விவாதம் நடந்தது. பிடித்த , ரஸித்த , பிடிக்காத , வெறுத்த , மனசைச் சிறிது தொட்ட , வாழ்க்கைப் போக்கையே மாற்றிய , அதிகமாக மாற்றாத என்றெல்லாம் அர்த்தம் சொல்லப்பட்டது. பாதிப்பு என்பதை Influence என்கிற ஆங்கில வார்த்தையின் மொழிபெயர்ப்பாக , ஓர் இலக்கிய விமர்சனக் குறியீடாக ஏற்றுக்கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. பாதிப்பு என்றால் கையைக் காலை உடைத்திருக்க வேண்டும் என்றோ , கண்களைக் குருடாக்கி யி ருக்க வேண்டும் என்றோ , உள்ளத்தைத் திரித்திருக்க வேண்டும் என்றோ அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும் இன்றைய அதிக பாதிப்பு நாளை தேய்ந்து மங்கிவிடலாம் ; அதனால் இன்று பாதிப்பு இல்லாது போய்விட்டது என்று ஏற்படாது. நேற்று கட்டுரை படித்த என் மதிப்புக்குரிய நண்பர் ஆர். ஷண்முகசுந்தரம் தன்னை ஒரு நூலும் பாதித்ததில்லை என்று கூறினார். பாதிப்பு என்கிற வார்த்தைக்கு இலக்கிய விமர்சனக் குறியீடாக அல்லாமல் , வேறு அர்த்தம் பண்ணிக்கொண்டதனால் , அவர் அப்படிக் கூறினார் என்று எனக்குத் தோன்றுகிறது. எந்த நிமிஷமுமே நமது வா...