Skip to main content

Posts

Showing posts with the label Clive to Keynes

கொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல் | ஜே. சி. குமரப்பா

கொள்ளையோ கொள்ளை | பூர்வபீடிகை இக்கம்பெனியார் இங்கு வந்த காலத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் பிடுங்கி வெளியேற்றி வந்தார்கள். கபடமான முறையில் திருட வேண்டுமென்று ஏற்படவில்லை. வெட்ட வெளிச்சமாகவே கொள்ளையடித்து வந்தார்கள். பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு இருந்துவந்த நிலைமையை மெகாலே கீழே கூறியுள்ளவாறு வர்ணிக்கிறார்:- “ இக்கம்பெனியின் மீதும் , அதன் அதிகாரிகள் மீதும் தனமானது மழையைப் போல் கொட்டிக்கொண்டேயிருந்தது. எட்டு லட்சம் பவுன்கள் பெறுமானமுள்ள வெள்ளி ரூபாய்கள் மூர்ஷிதாபாத்தினின்று கல்கத்தாவிலுள்ள வில்லியம் கோட்டைக்கு நதி மார்க்கமாக அனுப்பப்பட்டது. அதுவரை காய்ந்து கிடந்த கல்கத்தா இப்பணம் கிடைத்தவுடன் ஒளிபெற்று , ஆடம்பரமடைந்துவிட்டது. உடனே இங்கிலாந்திலும் சுறுசுறுப்பு உண்டாயிற்று. தலைகீழாகப் படுத்திருந்த வியாபாரங்கள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டன. ஆங்கில ஜனங்களுக்கு மீண்டும் மூச்சு வந்துவிட்டதாகவே காணப்பட்டது. எங்கும் பண நடமாட்டம் அதிகமாயிற்று. தன் மனம் திருப்தி அடையும் வரை கிளைவும் திரவியம் சேகரித்துக்கொண்டார். இவரைத் தடுக்கவோ , எதிர்க்கவோ அங்கு யாரும் கிடையாது. ” ஆங்கில சாம்ராஜ்யத்திற...

கொள்ளையோ கொள்ளை | பூர்வபீடிகை | ஜே. சி. குமரப்பா

கொள்ளையோ கொள்ளை | முன்னுரை ஓர் அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களிலும் , தனிப்பட்ட நபர்களின் பொருளாதார விவகாரங்களிலும் ஒரு முக்கியமான வித்தியாசமுண்டு. தனிப்பட்ட நபரின் வருவாய் முதலில் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இதற்குட்பட்டே அவன் செலவு செய்யக் கடமைப்படுகிறான். இவ்வரம்பை மீறுங்கால் கடன் வாங்க நேரிடுகிறது. அளவு கடந்து கடன் வாங்குவானாயின் அவைகளைத் திருப்பிக் கொடுக்க வகையில் லாதவனாகி ‘ இன்ஸால்வென்ட் ’ எனப் பெயர் சூடிக்கொள்வான். தனது வருமானத்தை விடக் குறைவாகச் செலவு செய்பவன் கையில் சிறிது சிறிதாகப் பணம் சேர்ந்துகொண்டே வரும் ; இதையே முதல் என்கிறோம். இம்முதலைச் சேமித்து வைக்கலாம். அல்லது மேற்கொண்டு இதை விருத்தி செய்ய வேண்டிப் பிறருக்குக் கடனாகக் கொடுத்து உதவலாம். செலவு செய்யப்படும் தொகை வருவாய்க்குச் சமமாக இல்லாதபோது கணக்கில் துண்டுவிழுகிறது. அதிகச் செலவினால் ஏற்படும் வித்தியாசத்தைக் கடன் (பற்று) என்கிறோம். மற்றதை முதல் (வரவு) என்கிறோம். ஆகவே தனிப்பட்ட ஒரு நபரின் வருமானத்தைக் கொண்டு அவனுடைய செலவுகளையும் , பற்று , வரவையும் தீர்மானித்துவிட முடியும். அரசாங்கத்தின் பொருளாதார விவக...

கொள்ளையோ கொள்ளை | முன்னுரை

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை ஆசிரியர் குமரப்பா அவர்கள் சமீபத்தில் (மார்ச் 1947) ‘ கிளைவ் முதல் கெய்ன்ஸ் வரை ’ (Clive to Keynes) என்று ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். மூல நூலுக்கு அவ்வாறு பெயரிட்ட காரணத்தை விளக்கி குமரப்பா அவர்கள் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்கள். அதாவது:- கிளைவ் பிரபுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர் சிறுவராக இருந்த பொழுது ஆசிரியர்களுக்கு அளவற்ற துன்பம் கொடுத்துவந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் அவரைக் கிழக்கிந்தியக் கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்க்குமாறு இந்திய தேசத்திற்கு அவருடைய 18 வது வயதில் அனுப்பி வைத்தார்கள். அவர் இந்தியாவில் 17 வருஷம் வேலை பார்த்துவிட்டு , 35 வது வயதில் இங்கிலாந்து திரும்பினார். அப்பொழுது அவர் கையில் ரொக்கமாக 3 லட்சம் பவுனும் , வருஷத்தில் 27 ஆயிரம் பவுன் வருமானம் வரக்கூடிய பூஸ்திதியும் இருந்தது. இந்த சூழ்ச்சிக்கார ராஜதந்திரி எவ்வாறு இந்தியப் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துச் சென்றாரோ அதே முறையைத்...