Skip to main content

Posts

Showing posts with the label குர் அதுல் ஐன் ஹைதர்

அக்னி நதி | அத்தியாயம் 4 | குர் அதுல் ஐன் ஹைதர் | தமிழில், சௌரி

பொழுது புலர்ந்தது. இமயத்தின் சிகரங்களின் மேல் இளம் இருள் மூட்டம் விலகிக் கொண்டிருந்தது. பொய்கைகளில் சிவந்த தாமரை மலர்கள் விரிந்தன. கிராமத்துப் பாதையில் சேர்ந்து செல்லும் ஆயர் மகளிரின் தலையில் பால் - தயிர்க்குடங்கள் இளம் வெயிலில் பள் பளத்தன. இலுப்பை மரங்களில் மலர்கள் குலுங்கின. அங்கே வண்டுகள் ரீங்கரிப்பது அவன் செவியிலும் ஒலித்தது. வெம்மை யேறிய பகலவனின் கதிர்கள் அவன் இமைகளை உணர்த்தியதும், கண்களைக் கசக்கிக் கொண்டு அவன் எழுந்தான். தான் சிதிலமடைந்த படிக் கட்டில் கிடப்பதை உணர்ந்தான். அது குளத்தின் படித்துறை. கண் விழித்துப் பார்த்தபோது, கலவரமடைந்தான், நாம் எங்கிருந்தோம், இங்கு எப்படி வந்தோம். தீவிரமாக யோசித்தும் விளங்கவில்லை. அலுப்புத் தீர சோம்பல் முறித்தபின் எழுந்தான்; மறுபடியும் உடலை முறுக்கிச் சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டபின், படியில் நிதானமாக உட்கார்ந்தான். எதிரே இலுப்பைத் தோப்பைக் கண்டான். கூடாரங்களைக் காணவில்லை. வெறிச்சோடிக் கிடந்தது. மரத்தின் மறைவிலிருந்து ஒரு மான் விருட்டென்று ஓடியது. அணில்கள் வில்வப் பழங்களைக் கடித்துத் தின்று கொண்டிருந்தன. பச்சைக் கிளிகள் கொப்புகளிலிருந்து பற...

அக்னி நதி | அத்தியாயம் 2 | குர் அதுல் ஐன் ஹைதர் | தமிழில், சௌரி

சிராவஸ்தி அழகான நகரம்; ராப்தி நதியின் தெற்குக்கரையில் வெகுதூரத்திற்குப் பரவியிருந்தது. வடபகுதியில் இமயமலைக் கண்டங்களாக ஊதாவும் நீலமுமாக மலைத்தொடர்கள் . தாழ்வரைகளில் விளை நிலங்கள், பயிர்கள் வளர்ந்து மண்டியிருந்தன. மலைச்சாரல்களில் இருந்த அடர்ந்த காடுகளில் புலிகளும் சிறுத்தைகளும் திரிந்து கொண்டிருந்தன. வடகோசல நாட்டில் நகரங்கள், புரங்கள், நகரிகள் எனும் பேரூர் , சிற்றூர், கோட்டம் யாவும் நதிக்கரையில் வளமான இடங்களில் அமைந்திருந்தன. மக்கள் தொகை பெருகப் பெருக, காடுகள் அழிக்கப் பெற்றுக் குடியிருப்புப் பகுதிகளாக மாறலாயின. சிராவஸ்தி, மக்கள் பெருக்கம் கொண்ட கலகலப்பான நகரம். தொலைதூர நாடுகளிலிருந்தெல்லாம் ஜனங்கள் அங்கே வந்து குடியேறியிருந்தார்கள். சிற்பிகள், பொற்கொல்லர்கள், துணி வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், கொல்லர், கருமார், தச்சர் ஆகிய யாவரும் தனித்தனிப் பேட்டைகளில் வசித்து வந்தார்கள். வண்டிக்காரர்கள், குயவர்கள், மதுபானக் கடைக்காரர்கள், பிரம்புக் கூடை முதலியவை பின்னும் குறவர்கள், நகரத்திற்கு வெளியே குடியிருந்தார்கள். இவர்களுக்கும் அப்பால் ஒதுக்குப்புறமாகப் புலையர்களின் சேரிப்பகுதி இருந்...

அக்னி நதி | அத்தியாயம் 1 | குர் அதுல் ஐன் ஹைதர் | தமிழில், சௌரி

மழை , தூறல்களைத் தெளித்துக் கொண்டிருந்ததை அந்த நதி காட்டியது. கரைப்பக்கமாக வண்ண மலர்கள் பசுமையில் கலந்து, மஞ்சளும் குங்குமமும் பூசிக்கொண்டவைபோல் மலர்ந்திருந்தன. வைர ஊசிகள் போல் உதிர்ந்த மழைத்தூறல்கள் புற்களில் சிதறிக்கிடந்தன. துறையில் சில ஓடங்கள் தென்பட்டன. தொலை விலிருந்து ஓடக்கார வாலிபன் ஒருவன் உல்லாசமாக இசைக்கும் இனிய பருவப்பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. கடப்பமரக் கூட்டங்களிடையே ஒரு மயில் தோகை விரித்துக் காத்திருந்ததது. மூன்று பெண்கள் நதிக்கரைக்கு மேலே மேட்டுத்திடலில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார்கள். முதலாமவள் தன் மேனி வண்ணத்துக்கு ஒப்ப குங்குமப்பூ நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள். அவள் கூந்தலில் செண்பகப்பூ பொலிந்தது. இரண்டாமவள் சற்று இளம் பிராயத்தினள். கண்களுக்கு மை தீட்டிக் கவர்ச்சியைக் கூட்டி யிருந்தாள். தோற்றமும் தோரணையும் 'இவள் ஓர் அரசகுமாரி' என்பதைக் காட்டின. மூன்றாமவள் மற்ற இருவருக்கும் பணிப்பெண். மழைத்திவலைகள் பட்டுவிடாதிருக்க, இருவருக்குமாக அவள் பட்டுக் குடையைத் தாழ்த்திப் பிடித்துக் கொண்டிருந்தாள். ஆலமரத்திற்குக் கீழே சிறு ஏரி. கரையோரம் கோரை மண்டியிருந்தது. நீர...