Skip to main content

Posts

Showing posts with the label வ. ராமசாமி

இவைகள் நவரத்தினங்கள் | வ. ரா.

(கு. ப. ரா.வின் 'கனகாம்பரம் முதலிய கதைகள்' தொகுப்பின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்ற முன்னுரை) கலைஞர்கள் இருவர். அவர்களை நான் இரட்டையர்கள் என்று கூப்பிடுவேன். அந்த இரட்டையர்கள் ‘மணிக்கொடி’க் காரியாலயத்தில் , 1934 ஆம் வருஷம் துவக்கத்தில் , எனக்குத் தரிசனம் தந்தார்கள். அன்று முதல் அவர்களிடம் எனக்கு அலாதியான பிரேமையும் மதிப்பும் ஏற்பட்டன. அவர்கள்தான் கு.ப.ராஜகோபாலன் , பிச்சமூர்த்தி என்று சொல்லவும் வேண்டுமா ? நண்பர் ராஜகோபாலன் மறைந்துபோனார். என்ன கொடுமை! எவ்வளவு பொறுக்க முடியாத துக்கம்! ஆனால் ராஜகோபாலன் , பத்து வருஷங்களுக்குள் , தமிழ் இலக்கியத்துக்குச் செய்துவந்த தொண்டைப் பற்றி நினைத்தால் அது என்னைப் பிரமிக்கும்படி செய்கிறது. சாதாரணமாக ராஜகோபாலன் ‘பேசாமடந்தை’யைப் போல இருப்பார். தனது கஷ்ட நிஷ்டூரங்களை யாரிடத்தும் வெளிப்படையாகச் சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு , அவ்வளவு மௌனத்தோடு அவர் இருப்பார். ஹிந்து சமாஜத்தில் காலத்தின் கொடுமையால் குவிந்து கிடக்கும் ஊழல்களையும் ந...

சிந்தனை முதல்வன்

பாரதி, வ. வெ. சு. அய்யர் மறைவுக்குப் பின் தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய இயக்கம் நீண்ட இடைவெளி விட்டுப் போய்விடாமல், ஒரு தொடர்ச்சி கொடுத்த, பாரதியின் முதல் சீடன் வ.ரா. மறைந்து போய் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. பாரதியின் சீடனாக மட்டும் இருந்த்தோடு நின்றுவிடவில்லை வ.ரா. பாரதி புகழ் பரப்பினவர். தேசிய பாட்டுகளுக்காக மட்டும் தேசிய கவியாகவே கருதப்பட்டிருந்த பாரதியை இலக்கிய ரீதியாக கவிஞன் என்று தமிழகம் எங்கும் சுற்றி அவனது இலக்கிய சாதனையை எடுத்துச் சொன்னவர். வ.ரா. அதோடு பாரதியை மகாவி என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. இன்று பாரதிக்கு மண்டபம் கட்டி கவுரவித்து, மகாகவி என்று வாய்க்கு வாய் கூறுகிறது. ஆனால் முப்பதுகளில் இதைச் சொல்ல மதிப்பீட்டு சக்தியும் எதிர்காலப் பார்வையும் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அந்த வ.ரா.வை தமிழகம் ஒரு கணம் நினைத்துக்கொள்ளத் தயங்குகிறது. மறுக்கிறதா மறக்க விரும்புகிறதா தெரியவில்லை. பாரதி மீது காட்டிய இலக்கிய அக்கறைக்காக மட்டும் எழுத்து அவரைப் 'பெரியவன்' என்று பாராட்டிவிடாது. பாரதி வழியிலே குட்டி பதினாறடியாக பாய்ந்து தமிழ் இலக்கியத்தைத் தானும் வளப்படுத்தி ஒரு பட...