Skip to main content

Posts

Showing posts with the label காந்தி சந்திப்பு

மகாத்மாஜியின் கோபம் | தி. சு. அவினாசிலிங்கம்

Photo | National Gandhi Museum மகாத்மாஜி கரூரில் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நான் கரூர் போய்ச்சேர்ந்தேன். கரூரிலிருந்து ஈரோடு முதலிய இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு வேண்டிய கார்களுடன் சென்றிருந்தேன். நான் போய்ச்சேர்ந்த கொஞ்ச நேரத்தில் காந்தியடிகள் வந்துசேர்ந்தார். அவர் வந்துசேர்ந்ததும் நேராகத் தம் அறைக்குச் சென்றார். குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாதாரணமாக அவர் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் மற்றவர்களைப் பார்ப்பது வழக்கம். அவர் வந்தவுடனே நான் வந்து காத்துக்கொண்டிருப்பதாக அவருக்குச் செய்தி போயிற்று. அதைக் கேட்டதும் , “ உடனே அவிநாசியைக் கூப்பிடு ”  என்று சொல்லியனுப்பினார். நான் சென்றேன். சாதாரணமாக மகாத்மாஜி புன்சிரிப்புடன் எல்லோரையும் வரவேற்பார். அதோடு நகைச்சுவையும் கலந்திருக்கும். அவரைச் சென்று காண்பதே ஓர் இன்பம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். ஆனால் ,  இச்சமயம் அவர் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது. சாதாரணமாக இருக்கும் புன்சிரிப்பு இல்லை. அந்த நகைச்சுவையும் காணப்படவில்லை. நான் சென்று அவர் எத...

மகாத்மா காந்தியுடன் ஒருநாள் | தி. சு. அவினாசிலிங்கம்

Photo Credit: The Hindu archives மகாத்மா காந்தியை நான் முதன்முதல் 1919 ஆம் ஆண்டி ல் சந்தித்தேன். அப்போது சென்னை கலாசாலையில் முதல் வகுப்பி ல் படித்துக்கொண்டிருந்தேன். ஒத்துழையாமை சம்பந்தமாக அவர்கள் அதுசமயம் சென்னைக்கு வந்திருந்தார். அன்று மாலை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்குச் சென்று அவரைத் தரிசித்தவர்களில் நானும் ஒருவன். அடுத்த தடவை நான் அவரைச் சந்தித்தது 1927 ஆம் ஆண்டில். அப்பொழுது அவர் கதர்ப் பிரசாரத்திற்காக வந்திருந்தார். திருப்பூரை அவர் தன்னுடைய கதர் இராஜதானி என்று சொல்லிக்கொள்வது வழக்கம். திருப்பூர் எனது சொந்த ஊராகவும் இருந்தது. நான் என் சட்டப் பரீட்சை முடிந்து திருப்பூரில் தொழில் ஆரம்பித்திருந்தேன். அப்பொழுதுதான் அவரிடம் முதன்முதல் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஹரிஜன முன்னேற்றத்திற்காக அவர் வந்தபோது கோவை , நீலகிரி ஜில்லாக்களில் அவர் சுற்றுப்பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யும் பேற்றையும் பெற்றேன். அச்சுற்றுப்பிரயாணம் நிகழ்ந்து இப்பொழுது ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் அவருடன் கழித்த நாட்கள் இன்...

பூனாவில் காந்தி | நித்ய சைதன்ய யதி

[இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில் விடுதலை செய்தது.  சிறையிலிருந்து வெளியே வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப் போனார்.  அங்கு அவரை நான் சந்தித்துப் பேசிய அனுபவம் இது.] காலை 4 மணிக்கு மணிபவனத்திற்குப் போனேன்.  காலை பிரார்த்தனைக்கு அவர் 5 மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும்.  அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  வழக்கமான ‘ ஶ்ரீராம் ஜெய்ராம் , ஜெய்ராம் ’ க்குப் பிறகு கீதையின்  இரண்டாவது அத்தியாயத்தின் ஐம்பத்தைந்தாவது செய்யுளிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினார்.  அறுபத்து இரண்டாவது செய்யுளுக்கு வந்தபோது அவருடைய குரலில் ஒரு கனிவு உண்டானது.  அவருடைய பாராயணத்தில் முழுமையான உண்மையுணர்ச்சி ஒலித்தது.  முதன் முறையாக நான் அந்த செய்யுள்களை கேட்டுக்கொண்டிருந்தேன். அவற்றின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை என்றாலும் மகாத்மாவின் வாயிலிருந்து நேரிடையாகக் கேட்டதால் அவற்றைப் பாராயணம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது....