Skip to main content

Posts

Showing posts with the label காந்தியின் தீபாவளி

தீபாவளி யாருக்கு? - மகாத்மா காந்தி

சகோதர சகோதரிகளே , இன்று தீபாவளி. இத்தருணத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இந்துக்களின் நாட்காட்டியில் ஒரு சிறப்பான நாள். விக்ரம் நாட்காட்டி 1 யின்படி நாளை , வியாழக்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. தீபாவளி ஒளிமயமாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த மகத்தான போரில் நன்மையின் சின்னமாக ராமனும் தீமையின் சின்னமாக ராவணனும் உள்ளனர். ராமன் ராவணனை வெற்றி கொண்டான். அந்த வெற்றி இந்தியாவில் ராம ராஜ்யத்தை நிறுவியது. ஆனால் இன்று இந்தியாவில் ராம ராஜ்யம் இல்லை. அப்படியானால் நாம் எப்படி தீபாவளியைக் கொண்டாட முடியும் ? யாரெல்லாம் ராமனைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் இந்த வெற்றியைக் கொண்டாட முடியும். கடவுள் ஒருவரே நம் ஆன்மாவில் ஒளியேற்றக் கூடும். அந்த ஒளியே உண்மையான ஒளியாகும். இன்று பாடப்பட்ட பஜனை கடவுளைக் காண்பதற்கு அந்தக் கவிஞர் 2 கொண்டிருந்த விருப்பத்தையே வலியுறுத்துகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் செயற்கையான ஒளியைக் காணச் செல்கிறார்கள் ; ஆனால் , இன்று நமக்கு வேண்டியிருப்பது அகத...