Skip to main content

Posts

Showing posts with the label விமர்னசம்

விமரிசனத்தின் எல்லைகள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கிய விமரிசனத்தைப்பற்றிச் சில சில்லறைச் சந்தேகங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் ( எனக்கும் தான் ) விளக்கிக்கொள்வதற்காகவே நான் இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன் . ஒரு கலையின் ஆரம்பதசையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எல்லாமே முடிவானவையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் . என்னைப்பற்றிய வரையில் நான் இதுபற்றியெல்லாம் “ உரக்கச் சிந்திக்கிறேன் ” என்று சொல்லலாமே தவிர வேறு சொல்வதற்கில்லை . இன்னும் ஒரு விஷயமும் தெளிவாகவே சொல்லுகிறேன் . சிறுகதையோ , நாவலோ , கவிதையோ எழுதும்போது வாசகர்களைப்பற்றிய நினைவைப் படைப்பாளன் அறவே ஒழித்துவிட வேண்டும் என்கிற நினைப்புள்ளவன் நான் . ஆனால் இலக்கிய விமரிசனம் செய்யும்போது வாசகனுடைய நினைவும் கூடவே வரத்தான் செய்யும் . என் இலக்கிய அனுபவத்தைத்தான் நான் எடுத்துச் சொல்ல முயலுகிறேன் என்றாலும் வாசகனுக்காகச் சொல்லுகிறேன் என்றும் சேர்த்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது . என் இலக்கிய அனுபவத்தை எடுத்துச் சொல்லி , கூடியவரையில் ஒரு இலக்கிய சிருஷ்டி வரையில் அந்த அனுபவத்தை அலசியும் பார்க்க முயலுவது...