Skip to main content

Posts

Showing posts with the label காகா காலேல்கர்

எரிப்பிறவி | காகா காலேல்கர்

Illustration Courtesy: Jayachandran / LiveMint (காந்தி எழுதிய ஆசிரம வாழ்க்கை வரலாறு நூலுக்கு காகா காலேல்கர் எழுதிய முன்னுரை.) (1) பாபூ அவர்கள் சிறை சென்ற ஒவ்வொரு சமயத்திலும் நாங்கள் அவரிடம் ஏதேனும் எழுதும்படி கோருவது வழக்கம். ஒரு சமயம் நான் அவரிடம் ஒரு தார்மீக வாசக மாலை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். அதற்குப் பதிலாக அவர் 13 பாடங்கள் கொண்ட பாலசிட்சையொன்று தயாரித்துத் தந்தார். ஆனால் அதற்குக் காரணமாயிருந்த கருத்தை விளக்கி , “ இந்தக் கருத்து ஏற்கப்படுமானால்தான் இந்த பாலசிட்சையை அச்சிடலாம் ” என்றார். பாபூவின் கருத்து மிகவும் புரட்சிகரமானதாயிருந்ததால் எங்களில் எவராலும் அதை ஏற்கக் கூடவில்லை. ஆகவே அந்த பாலசிட்சை நாளது வரையில் அச்சாகாமலே இருந்துவிட்டது . மற்றொரு சமயத்தில் நான் அவரிடம் , “ நீங்கள் ‘ சத்திய சோதனை ’ எழுதியிருக்கிறீர்கள். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாறும் எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது எங்களுக்கு சத்தியாக்கிரக ஆசிரமத்தின் வரலாறு எழுதிக்கொடுங்கள். நீங்கள் யாத்திரை செய்து செய்து சிரத்தையின் மூலதனம் செலவழிந்து போகும்போது மீண்டும் தூண்டுதல் பெறுவதற்காக ஆசிரம...