Skip to main content

Posts

Showing posts with the label உலகப் பெரியார் காந்தி

அவர் காண விரும்பிய நாடு | அண்ணா

“ பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் , உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்யோன்யமாய் வாழ வேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன்." இதுவே , உலக உத்தமர் காந்தியாரின் இலட்சியம் என்று அறிவிக்கிறார் பண்டித நேரு. ஒரு நாடு , அன்னியரிடம் அடிமைப்பட்டு , விடுதலைப் போர் தொடுத்து , பிறகு தன்னாட்சி பெறுவது , மகத்தானதோர் சம்பவம் - உலக வரலாற்றில் , ஒவ்வொரு சமயம் , படை பலத்தாலோ இராஜ தந்திர பலத்தாலோ , ஏதேனும் ஒரு நாடு பிறநாடுகளை அடிமை கொள்வதும் அடிமைப்பட்ட நாட்டின் செல்வத்தைச் சுரண்டுவதும் உலக வரலாற்றிலே எங்கோ ஓர் மூலையிலே காணப்படும் சிறு விஷயமல்ல. அந்த வரலாற்றிலே மிக முக்கியமான பகுதியே , இந்த சம்பவத்தைக் கொண்டதுதான். அலெக்சாண்டர் , ஜுலியஸ் சீசர் போன்ற அதிமகாவீரர்கள் கால முதற்கொண்டு , பெர்லின் சர்வாதிகாரி ஹிட்லர் காலம் வரையிலே , இந்த நாடு பிடிக்கும் போக்கு , இருந்தவண்ணமிருக்கிறது. அவர்கள் காலத்திலே , போர்த்திரனோடு வீர உணர்...