Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan முந்தைய பகுதி: வினோபாவும் துப்புரவும் 1957 இல் வினோபா அவர்கள் தஞ்சைக்குப் பூதான யாத்திரையாக வந்தபோது , ஒருநாள் காலையில் சென்று பார்த்தேன். (பார்த்த நாள் 23-1-57) கூட்டம் அதிகமாக இருந்தபடியால் சற்றுத் தூரத்திலேயே இருந்தேன். சர்வோதயம் ராமசாமி அவர்கள் , “ அருணாசலம் வந்திருக்கிறார் ” என்று அறிவித்தார். வினோபா அருகில் வரும்படி சொல்லவே , சென்றேன். காது அவருக்குக் கொஞ்சம் கேட்கவில்லை. “ எந்த அருணாசலம் ? மூனாவா ?” என்று கேட்டார். “ ஆம் ” என்று சொன்னேன். அதற்கு முன் அவரோடு அதிகம் நெருங்கிப் பேசிப் பழகியிருந்தும் , பத்து ஆண்டுகளுக்கு அதிகமாய்க் கடந்துவிட்டன. இருந்துங்கூட , அவர் என்னை ஞாபகம் வைத்திருந்து ‘ மூனா ’ என்று அடையாளம் குறிப்பிட்டது மாத்திரமல்லாமல் , 1945-46 ஆண்டுகளில் நான் பவுனார் சென்று அவருக்குக் கம்பராமாயணப் பகுதிகளைப் படித்துக் காட்டியதை நினைவுபடுத்திக்கொண்டு , “ நன்றாக ஞாபகமிருக்கிறது ” என்றார். அடுத்து , இயல்பாக டி.கே.சி. அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. சென்னையில் ஒரு சமயம் டி.கே.சி. அவர்களைத் தாம் சந்தி...